Monday, 18 August 2014

இவரும் ஒரு சாதனையாளர்..

செய்தி. வ.டினேஸ்

ச.பாலுராஜ் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் இவரை மனிதர்கள் சாதிப்பதற்கு எவ்வளவோ துறைகள் இருக்கின்றது அதில் ஒரு துறைதான் கராத்தே .....



நான் மேலே குறிப்பட்ட பாலுராஜ் இத்துறையில் சாதித்த ஒருவர்தான் இவர் அண்மையில் நடை பெற்ற தெற்காசிய நாடுகளுக்கு இடையில் இந்தியாவில் புதுடில்லியில் நடைபெற்ற கராத்தே போட்டயில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு காட்டா பிரிவில் தங்கப் பதக்கத்தினையும் குமிட்டே பிரிவில் வெண்கலப் பதக்கத்தினையும் வென்றெடுத்து எமது இலங்கைத்திரு நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் . அது மட்டுமல்ல அண்மையில் இலங்கையில் நடை பெற்ற 40 தேசிய விளையாட்டு விளாவிலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் சார்பில் கலந்து கொண்டு முதற் தடவயாக காட்ட பிரிவில் தங்கப் பதக்கத்தினை வென்றார் இவர் இதுவரையில்40 தங்கப்பதக்கங்களையும் 09 வெள்ளிப்பதக்கங்களையும் 07 வெண்கலப்பதக்கங்களையும்வென்றுள்ளார் 2003ம் அண்டு தொடக்கட்இன்றுவரை இவ்வாறு பதக்கங்களை வென்றவர்யார் ?

கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த சொந்தராஜா அன்னம்மா அகியோரின் புதல்வன் பாலுராஜ் ஆவார்

இவரது பாராட்டு இன்று கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம் பெற்றது

வரட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நீர்த்தாங்கிகள்

அம்மாறை மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்குவதற்கென 1000 லீட்டர் அளவுடைய 38 நீர்த்தாங்கிகள் 
Displaying Picture 1477.jpg
கல்முனை லீட்ஸ் நிறுவணத்தின் மாவட்ட இனைப்பாளர் க.தியாகராஜாவினால் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதனிடம் அம்மாறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் வைத்து இன்று திங்கள்கிழமை (18) கையளிக்கப்பட்டது இதில் லீட்ஸ் நிறுவணத்தின் மாவட்ட இனைப்பாளர் இர்பான் ,டேவிட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Sunday, 17 August 2014

பனங்காடு தில்லையாற்று பாலத்தில் சடலம் மிட்பு

என்.ஹரன் 

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பனங்காடு தில்லையாற்று பாலத்தில் மிதந்தனிலையில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று (17)பிற்பகல் 05.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது





கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆலையடிவேம்பு நாவட்காடு மகாசக்தி வீதியினைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான  52 வயதுடைய கதிரமலை குமார் என்பவராவார் இதனை இறந்தவரின் மகன் அடையாளம் காட்டியுள்ளார் 

இது தொடர்பான மேலதிக விசாரனைகளினை அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி நஜிப் தலைமையிலான குளுவினர் மேற்கொண்டு வருகின்றனர் 

Monday, 11 August 2014

கோடையில் மாரிபோல் பலத்த மழை..

வ.டினேஸ் அக்கரைப்பற்று

அக்கரைப்பற்று மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்இன்று மாலை

​பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது தற்போது சிலநாட்களுக்ககு முதல் கோடைப் போக வேளாண்மை  அறுவடை செய்யப்பட்டது      இதன்   பிற்பாடு மாரிப்போக  செய்கைக்கு மழையை எதிர்பார்த்து நின்ற விவசாயிகளுக்கு ஒரு நிவாரணமாக இது அமைந்துள்ளது மட்டுமல்லாமல் கோடைகால நீர் பற்றாக்குறையினையும் வெப்பத்தயும் தணித்துள்ளது  மக்கள் மிகவும் மகிழ்வுடன் காணப்படுகின்றனர் 

இரத்ததான நிகழ்வு

செய்தி:  பிரதேச செயலகம், ஆலையடிவேம்பு.

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.முனவ்வரின் ஏற்பாட்டில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறைக் கிளையின் அனுசரணையோடு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று (06) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
Displaying SAM_1451.JPG Displaying SAM_1445.JPG
Displaying SAM_1502.JPG Displaying SAM_1516.JPG
ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட சுமார் 100 பேர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்த இந்நிகழ்வினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் ஆரம்பித்துவைத்தார்.
இதன்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் செல்வி. சந்திமா பெத்தவடு தலைமையில் இரத்த வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டதுடன், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.முனவ்வர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவத்திற்கான கள உத்தியோகத்தரும் முதலுதவிப் பயிற்றுவிப்பாளருமான எஸ்.சசிதரன் மற்றும் அதன் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

புனித ரமழான் நோன்புப் பெருநாளைச் சிறப்பிக்கும் நிகழ்வு

ஆலையடிவேம்பு பிரதேச செயலக முஸ்லிம் உத்தியோகத்தர்களால் கடந்த வாரம் நிறைவுற்ற புனித ரமழான் நோன்புப் பெருநாளைச் சிறப்பிக்கும் வகையிலும், தாம் நோற்ற நோன்பின் மகத்துவங்களை சக தமிழ், சிங்கள உத்தியோகத்தர்களோடு பகிர்ந்துகொள்ளும் வகையிலும் நடாத்தப்பட்ட விசேட ரமழான் சிறப்பு நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (06) நடைபெற்றது.
Displaying SAM_1582.JPG Displaying SAM_1565.JPG
Displaying SAM_1545.JPG Displaying SAM_1534.JPG

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமைதாங்கிய இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரி.ஏ.நாஹிப் நோன்பின் பெருமைகள் தொடர்பாக உரையாற்றினார். அத்துடன் பிரதேச செயலாளர் தனது சிறப்புரையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடையே நிலவும் தோழமை உணர்வும் இவ்வாறான இன, மத ஐக்கியத்தினை வலுப்படுத்தக்கூடிய நிகழ்வுகளின் தற்காலத் தேவையும் தொடர்பாகத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அவரைத் தொடர்ந்து கணக்காளர் கே.கேசகன், பதவிநிலை உதவியாளர் ஏ.எல்.எம்.பஸீல், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்கள மகா சங்கப் பணிப்பாளர் ரி.பரமானந்தம், சமுகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அமீன் ஆகியோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்வினைச் சிறப்பிக்கும் வகையில் அலுவலக அலுவலக முஸ்லிம், தமிழ் உத்தியோகத்தர்களின் ரமழான் குறித்த கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.


செய்தி: பிரதேச செயலகம், ஆலையடிவேம்பு.

Sunday, 10 August 2014

சிறு விபத்து


அக்கரைப்பற்றில் இருந்து---டினேஷ்


அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சாகாமவீதி தீவுக்ககாலை சந்தியில் சிறு விபத்து ஒன்று
இன்று மாலை 5.15 மணியளவில் உளவு இயந்திரம் ஒன்றிற்கு பாதை விட்ட வேளை சாரதியின்  கட்டுப்பாடு இழந்த முச்சக்கர வண்டி வீதியை வட்டு விலகி பள்ளத்தினுள் விழுந்துள்ளது ... இவ் விபத்தில் தெய்வாதினமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை .... முச்சக்கர வண்டி வீதியால் வந்த பொது மக்களால் பள்ளத்தில் இருந்து வீதிக்கு கொண்டு வரப்பட்டது..




panakadu.com
panakadu.com

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி (திவிநெகும)



வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி (திவிநெகும) திணைக்களத்தின் ஆறாம் கட்ட வேலைகளை ஆரம்பித்தல் தொடர்பாக பிரதேச செயலகத்தின் கிராமமட்டங்களில் பணிபுரியும் கள உத்தியோகத்தர்களைத் தெளிவூட்டும் கருத்தரங்கொன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று (06) காலை நடைபெற்றது. 
பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில்  உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ரி.கிருபைராஜா, திவிநெகும தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.
“எங்கள் வீட்டுத்தோட்டத்திலிருந்து எங்கள் மரக்கறிகள்” என்ற தொனிப்பொருளில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் பயனாளிகளுக்கு மரக்கறிக் கன்றுகள் வழங்கல், விதைகள் மற்றும் பழமரக்கன்றுகள் உட்பட நடுகைப்பொருட்களை வழங்குதல் என்பன தொடர்பில் ஒவ்வொரு கிராமமட்டத்திலும் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்வரும் ஒக்டோபர், 20 ஆந்திகதியன்று ஜனாதிபதியின் தலைமையில் இதற்கான ஆரம்ப விழாவினை நடாத்துதல் என்பன தொடர்பாக இக்கருத்தரங்கில் விரிவாக ஆராயப்பட்டன.


இந்நிகழ்விற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்கிராம உத்தியோகத்தர்கள்வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

Friday, 8 August 2014

வரலஷ்மி விரதம்


ஹரனி......

08.08.2014 அன்று வரலஷ்மி விரதம்!
கைலாயத்தில் சிவனும் சக்தியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது சிவபெருமான் தன் அருகில் இருந்த சிவகணங்களான சித்திரநோமியை பார்த்து, “நான் தானே ஜெயித்தேன்.” என்றார். அதற்கு சிவகணமும் “ஆமாம்” என்றது.

இதை கேட்ட பார்வதிதேவி கோபம் கொண்டு, “நடுநிலையில்லாமல் தீர்ப்பு சொன்ன நீ குஷ்டரோகம் பிடித்து அவதிப்படுவாய்.” என்று சபித்தாள்.

அந்த நிமிடமே அந்த சிவகணத்தின் உடலில் குஷ்டரோகம் பிடித்துக்கொண்டது. தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான் சித்திரநோமி.

சிவபெருமானும் சக்தியிடம் சமாதானம் செய்தார். எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது போல் பார்வதிதேவி சமாதானம் அடைந்து, “சித்திரநோமி… நீ துங்கபத்திரா நதிக்கரையில் கங்கையும் யமுனையும் சங்கமமாகும் நேரத்தில், சூரியன் கடகராசியில் இருக்கும்போது சுக்லபட்ச வெள்ளியன்று சுமங்கலி பெண்கள் பூஜிக்கும் போது, அவர்களின் பார்வையில் நீ படவேண்டும். அவர்கள் உனக்கு வரலஷ்மி பூஜையின் மகிமையை பற்றிச் சொல்லுவார்கள். அதன் பிறகு உன் சாபம் நீங்கும்.” என்றார்.

சிவகணமான சித்திரநோமி, பார்வதி கூறியது போல் அங்கிருந்த பெண்களிடம் ஸ்ரீவரலஷ்மி விரதத்தின் மகிமையை கேட்டவுடன் நோய் நீங்கியது.

இவ்வாறு விரதத்தின் மகிமையை கேட்டாலே மகிமை என்றால் அதை முறையாக செய்தால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்பதை ஒரு அரசரின் சரித்திரத்தை படித்தால் தெரிந்துக் கொள்ளலாம்…மேலும் படிக்க



Monday, 4 August 2014

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பாடசாலைமட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டம்..

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் பரிந்துரையின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பாடசாலைமட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டமானது கடந்த வாரம் இடம்பெற்றது.

Displaying P1060723.JPG
Displaying P1060803.JPG Displaying P1060782.JPG

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம், கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலயம் மற்றும் ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வுகளில் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் தலைமையில் தரம் – 9,10 ஆகியவற்றைச் சேர்ந்த 100 மாணவ, மாணவியர்கள் பங்குபற்றினர். மூன்று மணித்தியாலங்கள் வீதம் நடாத்தப்பட்ட இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்குகளில் சிறுவர் உரிமைகள், சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல், சிறுவர் பாதுகாப்பு என்பன தொடர்பான கருத்தாடல்கள், சட்ட வரையறைகள் குறித்த விளக்கங்கள் மற்றும் சமுகமட்டத் தேவைப்பாடுகள் என்பன தொடர்பாகக் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்களிடையே தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன் அவை தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவைச் சேர்ந்த முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.நிசாந்தினி, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. யசோதா கபிலன் மற்றும் சிறுவர் நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.ஏ.வஸீம் ஆகியோர் இணைந்து நடாத்தியதுடன், கண்ணகிகிராமம் – 2 இற்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சங்கீதனும் பங்குபற்றியிருந்தார்.

கண்ணகி கலை இலக்கிய விழா..2014



தமிழ் மண்ணோடும் தமிழ் மரபோடும் இணைந்த கதை கண்ணகி கதை. மகாபாரத மற்றும் இராமாயணக் கதை மரபுகள் தமிழ் மக்கள் மத்தியில் வந்து சேர்ந்தவை ஆனால் கண்ணகி கதை மரபு உள்ளிருந்து எழுந்தது. மகாபாரத மற்றும் இராமாயணக் கதை மரபுகள் பல்வேறு கதை மரபுகளைக் கொண்டிருப்பதைப் போல கண்ணகி கதை மரபும் பல்வேறு கிளை மரபுகளைக் கொண்டுள்ளன.




கண்ணகியின் திண்மையும் தீரமும் நிறைந்த வாழ்வும் மக்கள் நலன் நாட்டமும் அவளை மக்களின் தெய்வமாக்கின என்றால் அது மிகையாகாது. வீர மங்கை என்ற தொன்மையுடன் பார்க்கப்படும் கண்ணகி சோழ நாட்டிலே பிறந்து பாண்டிய நாட்டிலே வழக்குரைத்து சேர நாட்டிலே தெய்வீகமாகின்றாள். பின்னாட்களில் ஈழ நாட்டிலே தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் வழிபாட்டுக்குரிய தெய்வமாகின்றாள்.

தமிழர் பண்பாட்டினையும் கண்ணகி அம்மன் வழிபாட்டினையும் எடுத்தியம்பும் வகையில் கண்ணகி இலக்கியக் கூடலினால் ஆண்டு தோறும் கண்ணகி கலை இலக்கிய விழாக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இம்முறை கண்ணகி கால் தடம் பதித்த கிழக்கு மாகாணத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள தம்பிலுவில் பிரதேசத்தில் கடந்த முதலாந்திகதி  வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி மூன்றாந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவு பெற்றது.

கண்ணகி கலை இலக்கியக் கூடலினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்ணகி கலை இலக்கிய விழா வெள்ளிக்கிழமை(01) தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய கலை அரங்கில் ஆரம்பமானது. முதலாம் நாள் தொடக்க விழா, விழாக்குழுக் குழுத் தலைவர் வீ.ஜயந்தன் தலைமையில்  ஆரம்பமானது. காலை வேளை பண்பாட்டுப் பவனி திருக்கோவில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து பண்பாட்டு கலை கலாசார நிகழ்வுகளுடன் பிரதான வீதி வழியாக தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து கண்ணகி அம்மன் ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் கலை அரங்கில் காலை அமர்வுக்கான நிகழ்வுகள் 'கூலவாணிகன் சாத்தனார்' அரங்கில் இடம்பெற்றது. இதன்போது தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரிய கலை வடிவங்கள் பற்றியும் தம்பிலுவிலில் கண்ணகி வழிபாடு பற்றி வரலாற்று நோக்குக்கும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டுக் கலை வடிவங்களுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டின் ஓர் அங்கமான போர்த் தேங்காய் அடிக்கும் நிகழ்வு மற்றும் கொம்பு முறி விளையாட்டு ஆகியன தம்பிலுவில் கண்ணகியம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. இதனை வயது வித்தியாசமின்றி ஆயிரக் கணக்கானோர் கண்டு களித்தனர்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் நிகழ்வுகள் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றன. இரண்டாம் நாள் காலை சேரன் செங்கட்டுவன் அரங்கில் வந்தாள் கண்ணகி வந்தாள் எனும் தலைப்பில் சிறப்பு கவியரங்கம் இடம்பெற்றன.  மூத்த கவிஞர் முல்லை வீரக்குட்டி தலைமையில் இடம்பெற்ற இக்கவியரங்கில் தம்பிலுவில் தயா, குறிஞ்சி வாணன், தம்பிலுவில் ஜெகா, கோபல்நாதன், நவயுகா ராஜ்குமார் ஆகியோர் பங்கு பற்றினர். இதனைத் தொடர்ந்து இந்நிகழ்வின்போது விழா சிறப்பு மலரான கூடல் (பரல்-3) வெளியிட்டு வைக்கப்பட்டது. இது தவிர அன்றைய நிகழ்வின்போது கண்ணகி கலை இலக்கிய விழா-2013 சம்பந்தமான விரண ஒளிப்படக் காட்சி காண்பிக்கப்பட்டதுடன் நூலங்காடியும் இடம்பெற்றது.
இரண்டாம் நாள் மாலை கோவலன் அரங்கில் நாட்டிய நாடகம், கண்ணகி காவடிப் பாடல்கள் ஆகியன இடம்பெற்றதுடன், திருக்கோவில் கல்வி வலய பாடசாலை மாணவர்களிடையே நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் திறமை காட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது.

மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை இளங்கோவடிகள் அரங்கில் நடைபெற்ற நிகழ்வின்போது கண்ணகி வழக்குரைக் காவியத்தின் காவி அமைப்பு, கண்ணகி வழக்குரைக் காவியத்தின் பாத்திர வார்ப்பு, கண்ணகி வழக்குரைக் காவியத்pல் கப்பல் கட்டும் கலையும் போர்க்கலையும், கண்ணகி வழக்குரைக் காவியத்தில் இசைக்கலையும் நடனக் கலையும் மற்றும் கண்ணகி வழக்குரைக் காவியத்தின் இலக்கிய நயம் உள்ளிட்ட ஆய்வுரைகள் இடம்பெற்றன.
மூன்றாம் நாள் மாலை இறுதி நிகழ்வுகள் மாதவி அரங்கில் இடம்பெற்றன. இதன்போது கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு பற்றிய விஷேட உரை இடம்பெற்றதுடன், கண்ணகியம்மன் காவியப் பாடல்கள், கொம்புமுறி நடனம், வழக்குரைக்கும் கண்ணகி- நாட்டிய நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை கலாசரா மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.



















முதலுதவிப் பயிற்சிச் செயலமர்வு



அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர்களுக்காக நடாத்தப்பட்ட ஒருநாள் முதலுதவிப் பயிற்சிச் செயலமர்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.


அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.ஸியாத் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியினை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட இடர் முகாமைத்துவ உதவியாளர் சி.முகுந்தன், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் மற்றும் இடர் முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.தனராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சிக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இடர் முகாமைத்துவத்திற்கான கள உத்தியோகத்தரும் முதலுதவிப் பயிற்றுவிப்பாளருமான எஸ்.சசிதரன் வளவாளராகக் கலந்துகொண்டு மூச்சுத்திணறல், மயக்கம், அதிர்ச்சி, மாரடைப்பு, எலும்பு முறிவு, நீரில் மூழ்குதல், விஷக்கடிகள், வலிப்பு, தலையில் காயங்கள் ஏற்படும் பாரதூரமான நிலைமைகளின்போது பாதிக்கப்படும் சிறுவர்கள், பராயமடைந்தோர் மற்றும் முதியவர்களுக்கு எவ்வாறு முதலுதவிச் சிகிச்சைகளை அளிக்கலாம் என்பது தொடர்பில் தனித்தனியான பயிற்சிகளை வாய்மூல விளக்கங்களுடனும் கலந்துகொண்ட இளைஞர், யுவதிகளின் பங்குபற்றுதலுடன் செய்துகாட்டினார்.

இம்முதலுதவிப் பயிற்சிச் செயலமர்வில் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழகங்களைச் சேர்ந்த சுமார் 45 இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டிருந்தனர்.


















வீடமைப்பு நிதியுதவிகள் வழங்கும் வேலைத்திட்டம்

மஹிந்த சிந்தனை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் சமுகசேவைகள் அமைச்சின் அங்கவீனர்களுக்கான தேசிய செயலகத்தினால் வலது குறைந்தோருக்கான வீடமைப்பு நிதியுதவிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கண்ணகிகிராமம் – 1 இனைச் சேர்ந்த சசிகலா யோகேஸ்வரன் என்ற பயனாளிக்கான காசோலை இன்று, 31-07-2014 வியாழக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுகசேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின்போது முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.எம்.பாயிஸின் பிரசன்னத்துடன் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசனால் வழங்கிவைக்கப்பட்டது.

Displaying photo 3.JPG

பார்வைத்திறன் குறைந்த முதியவருக்கு இலவச கண்வில்லைகள்

மஹிந்த சிந்தனை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் சமுகசேவைகள் அமைச்சின் தேசிய முதியோர் செயலகத்தினால் 60 வயதுக்கு மேற்பட்ட கட்புலன் குறைந்த முதியவர்களுக்குக் கண்வில்லைகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக ஆலையடிவேம்பு கிராமத்தினைச் சேர்ந்த மாரிமுத்து மாசிலாமணி என்ற பார்வைத்திறன் குறைந்த முதியவருக்கு இலவச கண்வில்லைகள் இன்று, 30-07-2014 புதன்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுகசேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அப்பிரிவின் முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.எம்.பாயிஸ் கலந்துகொண்டார்.

Displaying DSC_0187.JPG

Sunday, 3 August 2014

மலரே மௌனமா திரைப்பட வெள்ளேட்டம் ...

தருவது---வ.டினேஷ்


கிழக்கிலங்கையில் பல குறுந் திரைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது அந்தவகையில் அக்கரைப்பற்றில்2014-08-02 அன்று வெளியிடப்பட்டது கிஷோரின் மலரே மௌனமா திரைப்பட வெள்ளேட்டம் மற்றும் பாடல்களும் ,மிக விரைவில் இத்திரைப்படம் வெளிவர இருக்கின்றது.இவ்விழாவில் கலந்து கொண்ட இத்திரைப்பட நடிகை ப்ரியா மற்றும் சிறப்பு பிரதி பெறும் ஆலையடிவேம்பு பிரதேசசபை உறுப்பினர்
கௌரவ திரு.இரா வடிவேல் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் கௌரவ இரத்தினவேல் போன்ரோரைக் காணலாம்