மதுபோதையில் வாகன அனுமதிப்பத்தி ரம் இன்றி வாகனம் செலுத்திய நபர் ஒரு வருக்கு 11,000ரூபா தண்டப்பணமும், 15 நாட்கள் கடூழிய சிறைத் தண்டனையும் வழங்கி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பஸீல் தீர்ப்பளித்துள் ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
அக்கரைப்பற்று பனங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மது போதையில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற போது வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் குறித்த சந்தேக நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மறுநாள் வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதி வான் எச்.எம்.எம்.பஸீல் சாரதி அனுமதி பத்திரம் இல்லாததற்கு மூவாயிரத்து ஐந்நூறு ரூபாவும், மதுபானம் அருந்தியிருந்தத ற்காக ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாவும் அபரா தமாக செலுத்துமாறு உத்தரவிட்டதுடன் 15 நாட்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதி த்து தீர்ப்பளித்தார்.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, சாகாமம் வீதியால் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றபோதே அக்கரைப்பற்று பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்தினர்.

No comments:
Post a Comment