கடந்த புதனன்று கல்முனை கடலில் குளித்து மூழ்கிய தமிழ் வாலிபனின் சடலம் நேற்று வியாழக்கிழமை காலை சாய்ந்தமருது கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தது. விடயமறிந்த முஸ்லிம் மீனவர்கள் காரைதீவிலுள்ள மீனவர் சங்க பிரதிநிதி கே . ஜெயசிறிலுக்கு தெரிவிக்கவே அவர் குடும்பத்தாருடன் தொடர்புகொண்டு சடலத்தை கரைக்கு கொண்டுசேர்த்தனர். அவரதுசடலம் உறவினரிடம் ஒப்படைக்ககப்பட்டுள்ளது.
பாண்டிருப்பைச்சேர்ந்த லோகநாதன் ஜெனி லோசன் (20) என்பவரே இவ்விதம் கடலில்மூழ்கி இறந்தவராவார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
கடலில் மூழ்கிய சம்பவம் கடந்த புதன் பகல் இடம் பெற்றுள்ளது . கல்முனை பாண்டிருப்பை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியாரும் மற்றும் பெரிய நீலாவணை பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு தமிழ் சகோதர்களும் கல்முனை ஐஸ் வாடி கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த வேளை இளைய சகோதரன் லோகநாதன் ஜெனி லோசன் (20) கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார் . காணாமல் போன சகோதரனை தேடிய மூத்த சகோதரனான லோகநாதன் தேவநேசன் (21) என்பவரும் பாதிரியாரும் கல்முனை பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர் .

No comments:
Post a Comment