ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கணவனை இழந்த பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு அடிப்படை உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று, 28-05-2014 புதன்கிழமை காலை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடந்த இந்நிகழ்வில் இரண்டு குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப்பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பன பிரதேச செயலாளரினால் அக்குடும்பத் தலைவிகளிடம் கையளிக்கப்பட்டன.
இதன்போது பிரதேச செயலாளருடன் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.பாத்திமா சிபாயா மற்றும் பிரதேச செயலாளரின் வெகுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment