Tuesday, 17 June 2014

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் கண்ணகிகிராமப் பெண்களுக்கு வாழ்வாதாரக் கடனுதவிகள் வழங்கிவைப்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசனின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கண்ணகிகிராமம் – 2 கிராமசேவகர் பிரிவிலுள்ள வறுமைக்கோட்டின்கீழ் வாழுகின்ற பெண்களின் வாழ்வாதாரத்தொழில் மேம்பாட்டுக்கான கடனுதவி வழங்கும் நிகழ்வு இன்று, 30-05-2014 வெள்ளிக்கிழமை காலை கண்ணகிகிராமம் – 2, பல்தேவைக் கட்டத்தில் நடைபெற்றது.

குறித்த கிராமத்தின் மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் வி.தியாகராஜா விசேட அதிதியாகவும், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரி.ஏ.நாஹிப், கிராம உத்தியோகத்தர் கே.லோகநாதன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சங்கீதன் மற்றும் பிரதேச செயலாளரின் மக்கள் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டு கடனுதவிகளை வழங்கிவைத்தனர்.

இதன்போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த 11 பெண்கள் தமக்கான வாழ்வாதாரக் கடனுதவிகளைப் பெற்றுக்கொண்டதுடன், தமக்கு அத்தியாவசியமான இவ்வுதவியை பெற்றுக்கொடுத்த மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

No comments: