ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள நாவற்காடு கிராம சிவில் பாதுகாப்புக் குழுவின் அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு இன்று, 02-06-2014 திங்கட்கிழமை காலை அக்கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்துகொண்டதுடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் சிறப்பு அதிதியாகவும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அதிகாரிகள், நாவற்காடு கிராம இராணுவ முகாம் பொறுப்பதிகாரி உட்படப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இதன்போது குறித்த கிராமத்தின் சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவியான கிராம உத்தியோகத்தர் கே.பிரதீபா, செயலாளரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.சமனந்தகுமார உட்பட 23 உறுப்பினர்களுக்கு அதிதிகளால் அடையாள அட்டைகள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான இணைப்பு உத்தியோகத்தர் அப்துல்லா, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இதுவரை 60 கிராமங்களுக்கான சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு இவ்வாறான அடையாள அட்டைகள் வழங்கிவைக்கப்பட்டள்ளதாகவும், 61 ஆவது கிராமமாக குறித்த நாவற்காடு கிராம சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களுக்கு இன்று அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்ததுடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தனது உரையில் கிராமங்கள்தோறும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் சிறப்பான செயற்பாடுகள் மூலம் சமுகங்களில் பாதுகாக்கப்படவேண்டிய சமுக, பாதுகாப்பு விழுமியங்கள் தொடர்பாகவும் கருத்துரைத்தார்.
இதன்போது நாவற்காடு கிராமத்தில் கடந்தவருடம் நடைபெற்ற தரம் – 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் சிறார்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment