Thursday, 9 January 2014

கிராமசேவகர்களுக்கு இலத்திரனியல் ஆளடையாள அட்டை தொடர்பான பயிற்சி"


ஆட்பதிவு திணைக்களத்தினால் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் 15 வயதினைப் பூர்த்திசெய்த எல்லா இலங்கைப் பிரஜைகளுக்கும் நாடளாவியரீதியில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள நவீனரக இலத்திரனியல் தேசிய ஆளடையாள அட்டைக்காக விண்ணப்பதாரிகளின் கைவிரல் அடையாளங்களைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச கிராமசேவகர்களைப் பயிற்றுவிக்கும் இரண்டுநாள் பயிற்சிப் பட்டறை கடந்த 02-01-2014, வியாழக்கிழமை முதல் 03-01-2014, வெள்ளிக்கிழமை வரை இருநாட்கள் நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையினைப் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் ஆரம்பித்துவைத்ததுடன் வளவாளர்களாக ஆட்பதிவு திணைக்களத்திலிருந்து ரி.செல்வப்பிரியன், மட்டக்களப்பிலுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான பிராந்திய அலுவலகத்திலிருந்து வி.லவன்ராஜ் ஆகியோர் பங்குபற்றிப் பயிற்சிகளை நடாத்தினர்.

இவ் இரண்டுநாள் பயிற்சிகளில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளிலும் கடமையாற்றும் கிராமசேவகர்களும், கிராமசேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தரும், பிரதேச செயலகத்தில் இலத்திரனியல் ஆளடையாள அட்டை வழங்கலுக்காக நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்





No comments: