Friday, 31 January 2014

"கஞ்சிகுடியாறில் மீனவர்சங்கக் கட்டடத் திறப்புவிழா"

தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரட்னவின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் கஞ்சிகுடியாறு கிராமிய மீனவர் சங்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தின் திறப்புவிழா 27-01-2014, திங்கட்கிழமை காலை கஞ்சிகுடியாறு மீனவர் அமைப்பின் அலுவலகத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

சமயத்தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக அமைச்சர் ராஜித சேனாரட்ன, விசேட அதிதியாக அமைச்சர் சரத் வீரசேகர, கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, சிறப்பு அதிதிகளாக மீன்பிடி அமைச்சின் செயலாளர் ஜயந்த சந்திரசோம, மேலதிக செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்த்தன, அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.விமலநாதன் மற்றும் மேஜர் உபுல் வீரசிங்க ஆகியோரும் பிரதேச மீனவர் சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின்போது மீன்பிடி அமைச்சினால் மீனவர்களுக்கு 6 தோணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன் இந்திய காப் வர்க்கத்தினைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் ரோகு மற்றும் கட்லா இன மீன் குஞ்சுகள் கஞ்சிகுடியாறு குளத்தில் அதிதிகளால் விடப்பட்டன.

No comments: