ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இவ்வருடத்தில் புதிய வடிவமைப்புகளுடன் மீள்நிர்மாணம் செய்யப்பட்ட பிரதான வாயில் மற்றும் இரண்டு வாகனத் தரிப்பிடங்களைத் திறந்துவைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் கடந்த 06-01-2014, திங்கட்கிழமை இடம்பெற்றன.
அன்றையதினம் மதியநேர சுபவேளையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதேச செயலகத்தின் பிரதான வாயிலைப் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், அலுவலக வாகனங்களுக்கான தரிப்பிடத்தினை நிருவாக உத்தியோகத்தர் கே.எல்.ஏ.எம்.ரஹ்மத்துல்லாவும், அலுவலக ஊழியர்களுக்கான வாகனத் தரிப்பிடத்தினை சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் ஏ.எல்.எம்.பஸீலும் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தனர்.
இந்நிகழ்வுகளில் பிரதேச செயலக ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்
No comments:
Post a Comment