ஆலையடிவேம்பு பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினால் ஒவ்வொரு வருட இறுதியிலும் நடாத்தப்படும், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் சேவையாற்றி வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 30-12-2013, திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் பிரதேச செயலாளருமான வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடந்த 2013 ஆம் வருடம் இடமாற்றம் பெற்றிருந்த 10 உத்தியோகத்தர்கள் வாழ்த்துப்பாமாலையும் நினைவுப்பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது 2013 இல் அரச மற்றும் தனியார் ஒளிபரப்பு ஊடகங்களால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட இளம் பாடகர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டாம், மூன்றாம் இடங்களைப்பெற்ற சாதனையாளர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் அக்கரைப்பற்று ரிதம் இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்வு இடம்பெற்றதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் அரங்கேற்றப்பட்ட சில கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment