Friday, 31 January 2014

"இந்துமாமன்றத்தினால் நாவலர் பாலர் பாடசாலை அங்குரார்ப்பணம்"



ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் நடாத்தப்படவுள்ள நாவலர் பாலர் பாடசாலையின் அங்குரார்ப்பண வைபவம் இன்று 20-01-2014, திங்கட்கிழமை நண்பகல் அதன் தலைவர் வி.சந்திரசேகரம் தலைமையில் இந்துமாமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பாலர் பாடசாலையினை அங்குரார்ப்பணம் செய்துவைத்த இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் எஸ்.கனகரெத்தினம், அம்பாறை மாவட்ட முன்பள்ளிக் கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் ஜனாப்.இப்றாஹிம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் திருக்கோவில் வலயக்கல்விப் பணிமனையின் முன்பள்ளி இணைப்பாளர் எஸ்.தர்மபாலன், இறைபணிச் செம்மல் ரி.கைலாயபிள்ளை, ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், கலாசார உத்தியோகத்தர் திருமதி.என்.தேவராஜ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இதன்போது பனங்காடு, அருள்மிகு பாசுபதேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ க.லோகநாதன் குருக்களால் சம்பிரதாயபூர்வ சமயச்சடங்குகளும் ஆசியுரையும் வழங்கப்பட்டதுடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரால் பாலர்களுக்கு அப்பியாசக்கொப்பிகளும் ஒருதொகை புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டன.
 

No comments: