Monday, 28 December 2020

06 கோடியே 45 இலட்சத்து 40ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள்




அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட உலர் உணவுப்பொதி வழங்கும் நிவாரணப்பணி நிறைவடைந்துள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.

Sunday, 20 December 2020

ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.



வி.விபுர்தன் 

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாகவும் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.

Wednesday, 16 December 2020

படைப்புழு தாக்கம்

தில்லைநாயகம் வாணி & வினோதினி 



அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி மற்றும் மணல்சேனை பகுதிகளில் செய்கைப் பண்ணப்பட்டுள்ள சோளம் பயிர்கள் படைப்புழு தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Saturday, 12 December 2020

இலங்கையில் 10% பேருக்கு கொரோனா தடுப்பூசி: உலக சுகாதார ஸ்தாபனம்


இலங்கை சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு கொரோனா தொற்று ஒழிப்பிற்கான தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

Friday, 11 December 2020

பல்கலைக்கழக பதிவுகளுக்கான கால அவகாசம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு

 2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான பதிவுகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!


கிழக்கு மாகணத்தில முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது

சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவர் நேற்று இவ்வாறு உ யிரிழந்துள்ளார் இதனை

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Thursday, 10 December 2020

Covid – 19 தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்


Covid – 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழமாக காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவுசெய்யுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Wednesday, 9 December 2020

அரசு முஸ்லிம்களை பழிவாங்கவே உடல் தகனம் முடிவை எடுத்துள்ளது– அப்துல் ஹலீம்


முஸ்லிம்களைப் பழிவாங்கவே அரசு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடலை தகனம் முடிவை எடுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசியை யாரெல்லாம் ஏற்றிக்கொள்ள கூடாது – ஆய்வு தகவல்.

குறிப்பிடத்தக்க ஒவ்வாமைகள் காணப்படும் நபர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டாம் என பிரித்தானிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Pfizer மற்றும் BioNTech நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பிரித்தானியாவில் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது.

24 மணி நேரத்தில் கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்


நாட்டில் நேற்றைய தினம் (08) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 798 பேரில் 526 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID-19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.கம்பஹா மாவட்டத்தில் 97 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 06 பேரும் கண்டி மாவட்டத்தில் 40 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்றில் இறுக்கமான நடைமுறைக்கு வருவதனால் பொலிஸாரும், இராணுவத்தினரும் முழு நேர கண்காணிப்பில் ஈடுபடுவர் .


சுகாதாரத்துறையினருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் கவலை தருபவையாக இருக்கின்றது.

Tuesday, 8 December 2020

ஜோ பைடனால் 100 நாட்களில் 100 M கொரோனா தடுப்பூசிகள் எனும் இலக்கு நிர்ணயம்.

CORANA VIRUS

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது முதல் 100 நாட்களில் 100 மில்லியன் COVID – 19 தடுப்பூசிகள் எனும் இலக்கை நிர்ணயித்துள்ளார்.

கிழக்கில் இன்று 55 பேருக்கு கொரோனா ! அக்கரைப்பற்று - 37 ! கிழக்கில் இதுவரை 457 ஆக அதிகரித்துள்ளது .அக்கரைப்பற்றிலயே அதிகளவானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் இன்று 55 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .


தொற்றாளர்களில் அக்கரைப்பற்றிலயே அதிகளவானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

உலகின் முதலாவது கொரோனா தடுப்பு ஊசி இன்று பிரித்தானியாவில் ஏற்றப்பட்டது. மகிழ்ச்சியில் உலகம்.

COVID-19

பரிசோதனை நடவடிக்கைகளைக் கடந்து, கோரோனா தடுப்பூசி முதல் தடவையான பிரித்தானியாவில் இன்று மாக்கிரட் கீனன் என்ற 90 வயது பெண்மணிக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

திருக்கோவிலில் முகக்கவசம் அணியாத 15 பேர் கைது . நீதிமன்றத்தினால் தலா 2000 ரூபா அபராதம் !

திருக்கோவில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் திருக்கோவில் பொலீஸ் பொறுப்பதிகாரி ஜெயவீர தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் வீதியில் முகக் கவசம் அணியாமல்  சுற்றி திரிந்த 15 நபர்கள் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எச். எம். ஹம்ஸா ஒருவருக்கு தலா 2000 ரூபா அபராதம் விதித்தார். மொத்தமாக 30,000 தண்டப்பணம் விதிக்கப்பட்ட்து . 

தரம் குறைந்த சனிடைசர்களின் விற்பனை அதிகரிப்பு-கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர்


எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாத தரம் குறைந்த தொற்று நீக்கி (சனிடைசர்கள்) சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர், பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்

பிசிஆர் பரிசோதனை கட்டாயம்


அம்பாறை, கல்முனைப் பிராந்தியத்தில் பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களில் எதிர்காலத்தில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கட்டாயம் பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் பெற்றுகொள்ள வேண்டுமென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்தார்

அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய பிரதேசங்களிலுள்ள வியாபாரிகள் கட்டாயம் அந்தந்த சுகாதார வைத்தியதிகாரியுடன் தொடர்புகொண்டு பிசிஆர்  பரிசோதனை மேற்கொண்டு, அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறும் 
புதிதாக வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு பிசிஆர் சான்றிதழ் அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார். 

மேலும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்குட்பட்ட 13 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் வியாபாரிகளுக்கும் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் நாளாந்தம் எழுமாறாக பிசிஆர்  பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் பிசிஆர் பரிசோதனைக்கு மறுப்புத் தெரிவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமெனவும் தெரிவித்தார்.

இளைஞன் ஹெரோயினுடன் கைது





பேலியகொட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்த வீதி பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.