Monday, 30 March 2020

15 வயது சிறுமியொருவர், வன்புணர்வு

haran

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 15 வயது சிறுமியொருவர், சிறிய தந்தையினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Sunday, 29 March 2020

11 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

haran
(பாறுக் ஷிஹான்)
அம்பாறை அக்கரைப்பற்று வீதியில் அமைந்துள்ள பதுர் நகர் பதுர் பள்ளிவாசலில் வைத்து கைதான 16 பேரில் 11 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (28)இரவு இஷா தொழுகை நேரம் குறித்த பள்ளியின் முன்னால் ஒன்று கூடி இருந்த சிலர் அவ்வழியால் வந்த இராணுவத்தினர் கண்டு பள்ளிவாசலினுள் நுழைந்துள்ளனர்.

இதன்போது பள்ளிவாசலுக்குள் சென்று இராணுவத்தினர் மறைந்திருந்து 16 முஸ்லிம்களை கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட 16 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு தற்போது 11 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள போது அதனை மீறி செய்பவர்களுக்கு பொலிஸ் பிணை இல்லை என்றும் அவர்களுக்கு விளக்கமறியலில் உட்பட்ட 6 மாத கால தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
அக்கரைபற்று பள்ளிவாசலில் இஷாதொழுகை நடத்திய 11 பேர் கைது ! Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

சமுர்த்தி வங்கியினூடாக நேற்றுவரை 12 கோடியே எழுபத்தி ஜந்து இலட்சம் ரூபா

haran
(வி.சுகிர்தகுமார்) 
அம்பாரை மாவட்டத்தில் சமுர்த்தி வங்கியினூடாக நேற்றுவரை 12 கோடியே எழுபத்தி ஜந்து இலட்சம் ரூபா (127,500,000) இருபத்தி மூவாயிரத்து இருநூற்றி எண்பது(23280) பயனாளிகளுக்கு வட்டியற்ற கடனாக வழங்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் இக்கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நாம் தவறிழைத்தால், நமது சமூகமுமே தண்டிக்கப்படும்.

(படுவான் பாலகன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம்(30) காலை 6மணியிலிருந்து 2மணி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் மக்கள் அனைவரும் மிக அவதானமாகவும், அறிவுபூர்வமாகவும் சிந்தித்து தமக்குத் தேவையான அத்தியாவசிய கருமங்களை மேற்கொள்ளுமாறு அரசதரப்பினர் தொடர்ச்சியாக வேண்டிக்கொண்டுள்ளனர்.

கர்ப்பணி பெண் துக்கில் தொங்கி தற்கொலை..

haran
சின்ன ஊறணி பகுதியில் கர்ப்பணி பெண் துக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

Saturday, 28 March 2020

அம்பாறை பிராந்தியத்தில் 40க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது

haran
(பாறுக் ஷிஹான்)
நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மாணவர்கள் சட்டத்தை மதித்து நடக்குமாறும் அனுமதிக்கப்பட்ட விசேட அடையாள அட்டைகள் வைத்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் வெளியில் செல்ல வேண்டாம் என அம்பாறை பிராந்தியத்தில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Friday, 27 March 2020

மாணவர்கள் இணையம் ஊடாக கற்கலாம்

haran
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய பாடசாலை விடுமுறைகாலத்தில் பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயமைப்பின் ஊடாகவும் கட்டணமின்றி இ-தக்சலாவ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வசதியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

வியாபாரச் செய்திகள் ........

haran
(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்திக் கொடுப்பனவுகளை நடமாடும் சேவையாக கிராமங்கள் தோறும் வழங்கும் செயற்திட்டம் இன்று வியாழக்கிழைம ஆரம்பமானது.


பிரதேச செயலாளர், மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக இத் திட்டம் இங்குள்ள 24 கிராமசேவகர் பிரிவுகளிலும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

சமுர்த்தி வங்கிகளில் பல கிராமங்களைச் சேர்ந்த மக்களும் ஒரே நேரத்தில் பணம் பெற ன்றுகூடுவதால் கொரோனா தொற்று நோய் பரவ சந்தர்பம் ஏற்படும் என்ற காரணத்தால் அம் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு மற்றும் பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு முதியோர்களுக்கான கொடுப்பனவு ஆகியவற்றை வௌிக்கள உத்தியோகத்தர்கள் வழங்க ஆரம்பித்துள்ளனர்.

இச் செயற்திட்டத்தினை பிரதேச செயலாளர் எஸ்.சதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள்உள்ளிட்டோர் கிராமம் கிராமமாக சென்று கண்ணகாணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






மட்டு வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி உள்ளிட்ட மாதாந்த உதவிக் கொடுப்பனவுகள் கிராமங்கள் தோறும் வழங்கிவைப்பு Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

Thursday, 26 March 2020

haran
(பாறுக் ஷிஹான்)
கல்முனையில் அதிக எண்ணிக்கையில் வளையா மீன் கிலோ 250 க்கு அமோக விற்பனை செய்யப்படுகிறது.ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதிலும் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய பொலிஸாரின் விசேட அனுமதியில் கடற்தொழிலாளர்கள் தத்தமது படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

புதன்கிழமை(25) காலை அதிக எண்ணிக்கையில் வளையா மீன்கள் மீன் பிடிபட்டதுடன் கிலோ ருபா 250 க்கு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டது.இது தவிர அம்பாறை மாவட்டத்தின் கல்முனை புறநநகர்பகுதிகளில் ருபா 300 க்கு வளையா மீன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஊரடங்கு சட்டத்தினால் கடந்த 3 நாட்களாக மிகவும் மோசமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த மீனவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இன்று காணப்பட்டது . இன்று ஒரு மீனவருக்கு சொந்தமான தோனிக்கு சுமார் 30 முதல் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்கள் பிடிபட்டுள்ளன. மீன்களில் பெரும்பாலானவை வெளி மாவட்ட்ங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதனால் மீனவர்கள் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்ததுடன் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.















கல்முனையில் அதிக எண்ணிக்கையில் வளையா மீன் கிலோ 250 க்கு அமோக விற்பனை Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான எந்தவொரு நோயாளியும் இலங்கையில்  கண்டறியப்படவில்லை
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். 



இந்த நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், கடந்த ஜனவரி மாதம் குணப்படுத்தப்பட்ட சீனப் பெண் உள்ளிட்ட மூவர் இதுவரை குணப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன், 99 பேர் தொடர்ச்சியாக சிகிச்சைப்பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்

haran
(வி.சுகிர்தகுமார்)
கொரோனா தொற்றுநோயை தடுப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டிலிருந்து கொரேனாவை முற்றாக ஒழிக்க முடியும் என அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

Wednesday, 25 March 2020

கல்முனை பிராந்திய அலுவலகம் மூடபட்டுள்ளது

haran
(பாறுக் ஷிஹான்)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை(20) முதல் மறு அறிவித்தல் வரும் வரைக்கும் மூடபட்டுள்ளது.அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை 1996 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் தெரிவித்தார்.

Tuesday, 24 March 2020

வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

haran
(பாறுக் ஷிஹான்)
ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட போதிலும் அம்பாறை மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் விவசாயிகள் வழமை போன்று தத்தமது வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

90 பேர் வைத்தியசாலைக்குட்பட்ட பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

(வி.சுகிர்தகுமார்)  
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இதுவரையில் கொரோனா தொற்றுள்ளவர்கள் எனும் சந்கேகத்திற்கிடமான இருவர் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனையின் பின்னர் அவ்விருவர் உட்பட வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 90 பேர் வைத்தியசாலைக்குட்பட்ட பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியசாலையின் பொதுச்சுகாதார பிரிவு மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாட்டுபிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ஏ.எம்.முபாரிஸ் தெரிவித்தார்.

கொள்வனவு செய்வதில் பெருமளவு ஆர்வம்

haran

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு இன்று காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளதனை தொடர்ந்து பொது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெருமளவு ஆர்வம் காட்டி வந்தனர் இதனடிப்படையில் கல்முனைஇ சாய்ந்தமருது இமத்திய முகாம்இ கல்முனை இமருதமுனை இசம்மாந்துறைஇ அக்கரைப்பற்று நிந்தவூர் இஆகிய பிரதேசங்களில் பொருட்களை கொள்வனவு செய் அதிகளவு கூடியிருந்த பொதுமக்கள் முண்டியடிப்பதை காண முடிந்தது.

உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

(வி.செல்வி)


நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் கொரானோ தொற்று நோயை இலங்கையில் முற்றாக கட்டுப்படுத்தும் நோக்கிலும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
இதனடிப்படையில் நாடுமுழுவதும்  அரசாங்கத்தினால்  ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக  நாளாந்த கூலியாளர்கள் தமது  அன்றாட தொழிலை இழந்துள்ளனர்.

Monday, 23 March 2020

வியாபாரச் செய்திகள் ........

haran

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் அம்பாறை மாவட்ட கடற்றொழில் மீனவர்கள் அதிகளவான மீன்களை பிடித்துள்ளனர்.இவ்வாறு அதிகளவான மீன்களை திங்கட்கிழமை(23) காலை முதல் பிடித்து வருவதுடன் குறைந்த விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றனர்.
குறிப்பாக மருதமுனை அட்டாளைச்சேனை நிந்தவூர் பாண்டிருப்பு பெரியநீலாவணை சாய்ந்தமருது ஒலுவில் பொத்துவில் போன்ற பிரதேசங்களில் இவ்வாறு அதிகளவு மீன்களை மீனவர்கள் பிடிக்கின்றனர்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில்

haran

நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் பொது மக்கள்; கடைகள், தன்னியக்க இயந்திரங்கள், வங்கிகளுக்கு முண்டியடித்துக் கொண்டு செல்வதனை காண முடிகிறது.

Saturday, 21 March 2020

நோக்கம் மக்கள்...

haran
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம் மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதை தடுப்பதற்காகவே என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Thursday, 19 March 2020

கொரோனா விழிப்புணர்வு


கொரோனா தொடர்பில் உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் விழிப்புணர்வு செயலமர்வு அரச அலுவலகங்களில் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Saturday, 14 March 2020

கொரோனா

haran
இந்நாட்டின் 8 வது கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளி இனங்காணப்பட்டுள்ளார். கந்காடு கண்காணிப்பு தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்களில் ஒருவக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Thursday, 12 March 2020

முன்பள்ளிப் பாடசாலைகளும் மூடப்பட வேண்டும்

haran

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் மூடப்படும் காலப்பகுதியில் காரைதீவு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் முன்பள்ளிப் பாடசாலைகளும் மூடப்பட வேண்டும் என்று காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

பாசுபதேசுவரர் வித்தியாலய பெயர்ப்பலகை திரைநீக்க நிகழ்வு


பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலய பெயர்ப்பலகை திரைநீக்க நிகழ்வும், மரநடுகை நிகழ்வும்


பல வருடங்களாக முறையான பெயர்பலகையின்றி செயற்பட்டுவந்த திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பெயர்ப்பலகை திரைநீக்க நிகழ்வும் மரநடுகை நிகழ்வும் (11) இடம்பெற்றது.

20ஆம் திகதி முதல் விதைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படலாம்

haran
(வி.சுகிர்தகுமார்) 
அம்பாரை மாவட்டம் சாகாமம் மற்றும் வம்மியடி நீர்ப்பாசன குளத்தின் மூலம் சிறுபோக செய்கை மேற்கொள்ளக்கூடிய 2955 ஏக்கர்களில்  2930 ஏக்கர் வயல் நிலங்களுக்கும் இம்முறை விவசாய செய்கைக்காக அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் இம்மாதம் 20ஆம் திகதி முதல் விதைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படலாம் எனவும் ஏப்ரல் 10ஆம் திகதியுடன் விதைப்பு நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் எனவும் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

Sunday, 1 March 2020

சமுர்த்தி 25 பயானிகளுக்கு காஸ் சிலிண்டர்

haran
(வி.சுகிர்தகுமார்) 
புதிய அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்றதன் பின்னர் சமுர்த்தி பயனாளிகளுக்கான பல்வேறு நலனுதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமானது சமுர்த்தி பயனாளிகளின் வாழ்கை நிலையினை உயர்த்தும் பொருட்டு சமுர்த்தி வங்கிகளினூடாக எரிவாயு சிலின்டர்கள் மற்றும் எரிவாயு அடுப்புக்களையும் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.