Sunday, 9 February 2020

திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி !

கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப் போட்டி !
(வி.சுகிர்தகுமார்)
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று(07) மாலை நடைபெற்றது.



மகாவித்தியாலயத்தின் அதிபர் க.கிருஸ்ணபிள்ளை தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டியின் நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் திருக்கோவில் கல்வி வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் பி.பரமதயாளன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.கே.பண்டார ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் மாதுரி மயூரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வான்ட் வாத்திய குழுவினரின் இசையோடு வரவேற்க்கப்பட்ட அதிதிகள் தேசிய கொடியேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டதுடன் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதேநேரம் மாணவர்களின் அணி வகுப்பு நடைபெற்றதுடன் அதிதிகள் அணிநடை மரியாதையினை ஏற்றுக்கொண்டனர்.

இறுதியாக 381 புள்ளியினை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட திருமகள் இல்லத்திற்கும் முறையே 331 புள்ளியினை பெற்ற கலைமகள் ; 329 புள்ளியினை பெற்ற மலைமகள் இல்லங்களுக்குமான வெற்றிக்கிண்ணங்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான நினைவுச்சின்னங்களையும் அதிதிகள் வழங்கி வைத்தனர்.


கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி ! Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: