Sunday, 2 February 2020

இந்தியா தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது !

-கனகராசா சரவணன்- 
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து நெல் அறுவடை இயந்திரத்தில் வேலை செய்த இந்தியா தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை நேற்று (01) சனிக்கிழமை அம்பாறை பொத்துவில் வயல் பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொத்துவில் செங்காமம் வயல் பிரதேசத்தில் சுற்றுலா விசாவில் இந்தியாவில் இருந்து வந்து நெல் அறுவடை இயந்திரத்தில் சம்பவதினமான நேற்று மாலை வேலை செய்து கொண்டிருந்த போது தமிழ் நாடு பாம்பன் ஓடையைச் சேர்ந்த 42 வயதுடைய வீரையா நடராஜன் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளர் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொத்துவிலில் இந்தியா தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது ! Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: