Sunday, 16 February 2020

பஃவ்ரல் அமைப்பின் செயலமர்வு

 பஃவ்ரல் அமைப்பின்  செயலமர்வு


(ரவிப்ரியா)
இலங்கையில் தேர்தலகளை பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் வேட்பாளாகள் தெரிவில் 2015 மார்ச் 12ல் கட்சிகள் ஒப்புக் கொண்ட வேட்பாளர்கள் தெரிவில் கடைப்பிடிக்க வேண்டிய எட்டு அளவு கோல்களை மீளாய்வு செய்யும் முகமாக பஃரல் அமைப்பினால தேர்தல் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன்; ஏற்பாடு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆலோசனை செயலமர்வு மட்டக்களப்பு தேர்தல் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் புதனன்று (12) காலை பஃவ்ரல் நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் சிறீதரன் சபாநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன், பிராந்திய மனித உரிமைகள் அணைக்குழு பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ அனீஸ், அருட்தந்தை அலெக்ஸ் றொபேட் மற்றும் பஃவ்ரல் கே.எம்.றினோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


எட்டு அளவுகோல்கள் பற்றிய யாதார்த்த தன்மையை வளவாளர் அனிஸ் விரிவான விளக்கத்தை அளித்தார். அவரின் விரிவுரையைத் தொடர்ந்து பங்குபற்றியவர்கள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குறித்த 8 அளவகோல்கள் பற்றிய தங்களின் நிலைப்பாடு மற்றும் திருத்தம், நீக்கம், சேர்ப்பு என்பன பற்றி ஆராய்ந்து குழு அறிக்கைகளை சமர்ப்பித்து விளக்கமளித்தனர்.

குறிப்பாக எட்டு அளவுகோல்கள் அப்படியே இருக்க வேண்டும் என்பதில் நான்கு குழுக்களம் உடன்பாடுடையளவனாக காணப்பட்டன. அத்துடன் எட்டாவது அளவ கோலில் விசேட தேவையுடையோரம் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதும், அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வேட்பாளாகளுக்கான ஒழுக்க கோவையை தயாரித்து வெளிப்படுத்த வேண்டும் என்பதும்; அளவு கோல்களாக மேலதிகமாகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதும்; பொது உடன்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வேட்பாளர்களின் வயது, கல்வி, சமூகம் சார்ந்த செயற்பாடுகள், மும்மொழி ஆற்றல், சமயச் சார்பு, அனுபம். பிராந்திய வளப்பயன்பாடு பற்றிய ஆற்றல் அனுபவம் வேட்பாளா அரச ஒப்பந்தக்காரராக இருத்தல் என்பன பற்றி குழுக்களால் பிரஸ்தாபிக்கப்பட்ட போதும் அவை குறித்து உதவிதேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன், சிறிதரன், அனிஸ் ஆகியோர் குறித்த விடயங்கள் தொடர்பாக சிறந்த தெளிவபடுத்தல்களை சட்ட குணுக்கங்களடன் அளித்ததை அடுத்து குறித்த விடயங்கள் அறிக்கையிடுதலில் தவிர்க்கப்பட்டது.
















மட்டக்களப்பில் பஃவ்ரல் அமைப்பின் வேட்பாளர் தெரிவில் அரசியல் கட்சிகளின் 8 அளவுகோல்கள் பற்றிய செயலமர்வு Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: