Saturday, 1 February 2020

பொங்கல் விழா


 

(வி.சுகிர்தகுமார்)
அம்பாறை ஆலையடிவேம்பு  பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இன்று(31) சிறப்பாக நடைபெற்றது.



தமிழர்களின் பாரம்பரியங்களை எடுதியம்பும் வகையில் இடம்பெற்ற பொங்கல்  விழாவில் ஸ்ரீமத் நித்தியானந்தா ஜீ மகராஜ் மற்றும் சரஸ்வதி மகராஜ் ஆகியோர் அருளாளர்களாக கலந்து கொண்டனர்.

பொங்கல் விழாவானது பிரதேச செயலகத்தின் ஸ்ரீ மகாகணபதி ஆலயத்தின் முன் புதுப்பானையில் அரிசியிட்டு பொங்கலிடும் நிகழ்வுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த அருளாளர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

பின்னர் இடம்பெற்ற பொங்கல் விசேட பூஜை வழிபாடுகளை ஸ்ரீ மகாகணபதி ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சதுசர்மா நடாத்தி வைத்தார்.

இறுதியாக விசேட பிரார்த்தனை வழிபாடுகளை நடாத்தி வைத்த ஸ்ரீமத் நித்தியானந்தா ஜீ மகராஜ் நற்சிந்தனையையும் உத்தியோகத்தர்கள் மத்தியில் வழங்கினார்.

நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கணக்காளர் கே.கேசகன் நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா, பதவி நிலை உதவியாளர் ஆ.சசீந்திரன், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர்; கலந்து கொண்டனர்.










அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா! Rating: 4.5 Diposkan Oleh: Office

No comments: