haran
பொத்துவில் பிரதேச பல்கலைக்கழக மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (08.02.2020) அன்று தாண்டியடி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
தாண்டியடி தொடக்கம் பொத்துவில் வரை உள்ள கிராமங்களில் இருந்து பல்கலைக்கழகங்களில் கல்வி பயிழும் 56 பல்கலைக்கழக மாணவர்கள் இதன் போது கெளரவிக்க பட்டனர்.
Battinews ஸ்தாபகர் Dr.R.சயனொளிபவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு முன்னாள் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், பொத்துவில் பிரதேச செயலாளர் திரவியராஜ், பொத்துவில் பிரதி தவிசாளர் பார்த்திபன், சங்காரவேல் பவுண்டேசன் ஸ்தாபகர் சுகுமார் சங்காரவேல் , மட்டக்களப்பு வலய பிரதி கல்வி பணிப்பாளர் ஹரிகரராஜ் , care முன்னாள் பணிப்பாளர் தங்கவேல், சங்காரவேல் பவுண்டேசன் செயலாளர் பிரேமானந்தம் , பொருளாளர் குபேந்திரன், பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.