Wednesday, 13 November 2019

பாலியல் துஸ்பிரயோகம்

haran


(பாஷி)
வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கல்முனை நீதவான் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு புதன்கிழமை(13) கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைகுடி பிரதேசத்தை சேர்ந்த செய்யது அப்துல் கரீம்(58) என்ற நபர் அதே பிரதேசத்தை சேர்ந்த 8 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி பிரத்தியேக வகுப்பிற்கு சென்று வரும் வழியில் வழிமறித்து தனது வீட்டிற்குள் அழைத்து பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியான விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் இன்று (13) குறித்த சந்தேக நபருக்கு ரூபா 20000 பெறுமதியான காசு பிணை மற்றும் தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் குறித்த சந்தேக நபரது வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 20ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கல்முனை நீதிமன்ற நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.

அத்துடன் குறித்த சந்தேக நபர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வசிக்கின்ற பிரதேசத்திற்கு செல்லவோ அதே பிரதேசத்தில் வாழவோ கூடாது என்றும் முறைப்பாட்டாளர்கள் தரப்பில் இருந்து குறித்த சந்தேக நபருக்கு எந்த விதமான பிரச்சனைகளும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதுடன் குறித்த சிறுமி பெற்றோரின் பாதுகாப்பில் வளர்க்கப்பட வேண்டும் என்றும் சிறுமியை சிறந்த மனநல வைத்திய அதிகாரி ஒருவரிடம் உளநல ஆலோசனை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பான வைத்திய அறிக்கையில் 2019.08.31 அன்று மாலை 5.20 மணிக்கு சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சிறுமியின் யோனி(பிறப்புறுப்பு) கன்னி சவ்வு ஊடாக உட்செலுத்தியதற்கான சான்று காணப்படுவதாகவும் மற்றும் குதவாயினூடாக உட்செலுத்தியதற்கான சான்று மற்றும் யோனி வழியினூடாக உட்செலுத்தியதற்கான சான்று என்பன நிரூபணம் ஆகியுள்ளது என கல்முனை அஷ்ரப் ஞாபகர்த வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர். பி.கே.எஸ். ஸ்ரீவர்தன நீதிமன்றிற்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




No comments: