Thursday, 14 November 2019

ஒருவர் பொல்லால் தாக்கி கொலை 

haran


மட்டக்களப்பு – வாழைச்சேனை, கண்ணகிபுரம் பகுதியில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.


மனைவியுடனான வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, கணவர் தனது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளார்.

இதனைத் தடுக்கும் நோக்கில் மனைவி, தனது கணவனை பொல்லால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த 36 வயதான நபர், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாக்குதலின் போது காயமடைந்த 16 வயதான மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

No comments: