haran
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளாக உபயோகப்படுத்த நாட்டிலுள்ள சில பாடசாலைகள் இன்றைய பாடசாலை நடவடிகைகள் முடிந்ததும் அந்தந்த கிராம சேவையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பாடசாலைகளில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் இடம்பெற்று முடிந்த பின்னர் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பாடசாலைகள் மீண்டும் உரியவாறு ஒப்படைக்கப்படுமென கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு நாளையதினம் மூடப்படவுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் அனைத்தும் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

No comments:
Post a Comment