Monday, 7 October 2019

ஒருவர் கொலை

haran
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.





நேற்றிரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் 2, வன்னியார் வீதியில் உள்ள கடற்கரை பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மரக்கட்டை ஒன்றினால் தலையில் தாக்கி குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

73 வயதுடைய முகம்மது தம்பி மீரான் எனும் மீராலெப்பை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடி போதையில் இருந்து இருவரை நாள் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: