Friday, 22 November 2019

தெல்லிப்பழை மருத்துவ சிகரத்திற்கு பாராட்டு

haran
தெல்லிப்பழை மருத்துவ சிகரத்திற்கு பாராட்டு 
 

 


யாழ்ப்பாணம்  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக    வைத்திய அத்தியட்சகராக  கடமையாற்றிய வைத்தியர் யோ .திவாகர் தனது   எம்.டி.மருத்துவ நிர்வாகம் உயர் படடப்படிப்பை  மேற்கொள்ளவுள்ள செல்வதற்கான   பிரியாவிடை நிகழ்வு     நேற்று முன்தினம்  இடம் பெற்றிருந்தது 

தற்போதைய  வைத்திய அத்தியட்சகர்  விமலசேன தலைமையில் புற்றுநோய் கேட்ப்போர் கூடத்தில்  இடம் பெற்ற இவ் நிகழ்வில்  தனது ஆரம்பக்கல்வியினை யாழ் மானிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலையிலும் உயர்கல்வியினை யாழ் சென்யோன் கல்லூரியிலும் பயின்ற இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் பட்டம் பெற்று  2002இல் வைத்தியராக சமூகத்திற்குள் பிரவேசித்தார் 


இவரது நிர்வாகக் காலத்தில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அபிவித்திருத்திகள், உட்கட்டுமானங்கள், விசேட பிரிவுகள் ,புதிய பிரிவுகள் ஆரம்பிப்பு என்பன வைத்தியசாலைக்கு பொற்காலமாக கருதப்பட்டது 

எம். பி .பி .எஸ்,  எம் .எஸ். சி. மருத்துவ நிர்வாகம் தொடர்பான பட்டங்களை கொண்டுள்ள இவர் கொழும்பில் தனது எம்.டி.மருத்துவ நிர்வாகம் உயர் படடப்படிப்பை  மேற்கொள்ளவுள்ளார்

இவ் நிகழ்வில் 
வைத்தியர் அவர்களுக்கு வைத்தியசாலை சமூகம் சார்பில்  நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பந்தமை குறிப்பிடத்தக்கது


No comments: