Wednesday, 10 January 2018

34 கிலோ கஞ்சாவுடன் வேட்பாளர் கைது

காத்தான்குடி பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 34 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.




முச்சக்கர வண்டியில் கஞ்சாவை எடுத்துச் சென்றபோது, காத்தான்குடி, பூனொச்சிமுனை - கடற்கரை வீதி பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றின் அருகில் வைத்தே இந்த 37 வயதான வேட்பாளர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரை மட்டக்களப்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்து 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவினைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
haran

No comments: