Monday, 29 January 2018

சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையம முற்றுகை

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பகுதியில்  சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் ஒருவரைக் கைதுசெய்துள்ளதுடன் கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிப்பிற்காக வைக்கப்பட்ட பொருட்களையும்
கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  மேற்படி கசிப்பு உற்பத்தி செய்யும் வீட்டினை நேற்றைய தினம் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்  42  லீற்றர்  கோடா மற்றும் 13 லீற்றர் கசிப்பு ஆகியவற்றையும் கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த  முற்றுகையின் போது  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த  நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபரை இன்று  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.






haran

No comments: