(சகா)
லண்டன் தமிழ் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனுசரைணயுடன் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் கடந்த இருநாட்களில்(25,26) 70லட்சருபா பெறுமதியான 140 ஏழை கண்நோயாளர்களுக்கான கற்றரக்ட் சத்திரசிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்துமுடிக்கப்பட்டிருக்கின்றன.
வைத்தியஅத்தியட்சகர்களான இரா.முரளீஸ்வரன் (கல்முனை) குண.சுகுணன் (களுவாஞ்சிக்குடி) ஆகியோரின் ஏற்பாட்டில் லண்டனிலிருந்துவந்த ஈழத்து கண்வைத்தியநிபுணர்களான எம்.லோகேந்திரன்(வட்டுக்கோட்டை) ராதா தர்மரெட்னம் (களுவாஞ்சிக்குடி) காந்தாநிறஞ்சன் (மட்டக்களப்பு) ஆகியோருடன் கண்வைத்தியநிபுணர்களான எஸ்.சந்திரகுமார்(யாழ்ப்பாணம்) ஏ.பி.கங்கிலிபொல(கல்முனை) பி.டயஸ் (மொனராகல) உள்ளிட்ட 8 வைத்தியநிபுணர்கள் இச்சத்திரசிகிச்சைகளை செய்தனர்.
அவர்கள் சத்திரசிகிச்சையிலீடுபடுவதையும் அவர்கள் பாராட்டப்படுவதையும் நோயாளர்களையும் காணலாம்.
No comments:
Post a Comment