ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான சித்திரைப் புதுவருட விளையாட்டுப்போட்டிகளில்
மூன்றாவது போட்டியான படகோட்டப் போட்டி இன்று, 28-04-2017 வெள்ளிக்கிழமை காலை 9.00
மணிக்கு இடம்பெற்றிருந்தது.
சாகாம
வீதியின் பனங்காடு பாலத்தின் கீழ், தில்லையாற்றில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வை
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும், சித்திரைப் புதுவருட விளையாட்டுப்
போட்டிக்குழுவின் தலைவருமான வி.ஜெகதீஸன் முன்னைய மரதன் ஓட்டம், சைக்கிளோட்டப்
போட்டிகளைப் போன்றே கொடியசைத்து ஆரம்பித்துவைத்தார்.
ஐந்து
வள்ளங்களுடன் சுமார் பத்து வீரர்கள் பங்குபற்றிய குறித்த படகோட்டப் போட்டியில் ஏ.சுரேந்திரன்
- கே.ராஜேந்திரன் குழுவினர் முதலாமிடத்தையும், கே.சுதர்சன் - எல்.நிதர்சன் குழுவினர்
இரண்டாமிடத்தையும், ரி.சந்திரன் - எம்.சத்தியமூர்த்தி குழுவினர் மூன்றாமிடத்தையும்
எம்.கிருபைராஜா - எஸ்.மதன் குழுவினர் நான்காமிடத்தையும் பெற்றனர்.
இப்போட்டியின் முடிவில் பனங்காடு மற்றும்
சின்னப்பனங்காடு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இணைந்து போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் தாகசாந்தி நிகழ்வொன்று
ஏற்பாடு செய்திருந்ததோடு பிறை எப்.எம் வானொலி ஊடக அனுசரணை வழங்கியிருந்தது.
இப்
படகோட்டப்போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசுகளும் பங்குபற்றிய
வீரர்களுக்கான ஆறுதல் பரிசுகளும் இன்று மாலை அக்கரைப்பற்று - 7/4, தருமசங்கரி விளையாட்டு
மைதானத்தில் இடம்பெறவுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான
சித்திரைப் புதுவருட விளையாட்டுப்போட்டிகளின் முடிவில் இடம்பெறவுள்ள பரிசளிப்பு
வைபவத்தில் அதிதிகளால் வழங்கிவைக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment