Thursday, 20 April 2017

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சித்திரைப் புதுவருட ஒன்றுகூடல்


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் வருடாந்தம் நடைபெறுகின்ற தமிழ் – சிங்கள சித்திரைப் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (20) நண்பகல் 12.00 மணிக்கு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மூவினங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்ததுடன், பிறந்திருக்கும் ஏவிளம்பி தமிழ் வருடத்தினைச் சிறப்பிக்கும் வகையிலான பதவிநிலை உத்தியோகத்தர்களின் சிறப்புரைகளும், அலுவலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன.

இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக தமிழ் - சிங்கள பாரம்பரிய சிற்றுண்டிகள் சகோதர முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டதுடன், நிகழ்வின் இறுதியில் அனைத்து உத்தியோகத்தர்களும் பங்கெடுத்த மதியபோசன விருந்துபசார நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.










No comments: