Sunday, 30 April 2017

மகா கும்பாபிசேகம்

 அக்கரைப்பற்று கோளாவில் அருள்மிகு ஸ்ரீ கண்னகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று   30ம்திகதி  ஞாயிற்றுக்கிழமை ஏவிளம்பி வருஷம்  காலை 09.08முதல் 10.59 வரையான சுப நேரத்தில் குடமுளுக்கு

Friday, 28 April 2017

ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய படகோட்டப் போட்டி


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான சித்திரைப் புதுவருட விளையாட்டுப்போட்டிகளில் மூன்றாவது போட்டியான படகோட்டப் போட்டி இன்று, 28-04-2017 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெற்றிருந்தது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய சைக்கிளோட்டப் போட்டி


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான சித்திரைப் புதுவருட விளையாட்டுப்போட்டிகளில் இரண்டாவது போட்டியான சைக்கிளோட்டம் இன்று, 28-04-2017 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்திய சித்திரைப் புத்தாண்டு மரதன் ஓட்டப் போட்டி


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான மாபெரும் சித்திரைப் புதுவருட விளையாட்டுப்போட்டிகள் இன்று, 28-04-2017 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு முதலாவது போட்டியான மரதன் ஓட்டத்துடன் ஆரம்பமாயின.

Wednesday, 26 April 2017

புற்றுநோயாளியின் அறுவைச் சிகிச்சைக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உதவி


ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பொதுப்பணிகளில் ஈடுபாடுடையவரும், கிராம அபிவிருத்திச் சங்கம், சிவில் பாதுகாப்புக் குழு என்பவற்றில் உறுப்பினராக இருந்து செயற்பட்டு வருபவருமான அக்கரைப்பற்று - 9, மாயழகு வீதியில் வசித்துவரும் ராஜூ என்றழைக்கப்படும் கந்தையா இராசரெத்தினம் (தே.ஆ.அ.இல. 552061560V) என்பவர் கடந்த வருடம் முதல் புற்றுநோயால் பீடிக்கப்பட்ட நிலையில் பதுளை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற்றுவரும் இவர், தனது குடும்பத்தின் வறுமை நிலையின் காரணமாகத் தனக்கு அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள அறுவைச் சிகிச்சையின் பொருட்டு இயன்றளவு நிதியுதவியை ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கோடு அண்மையில் அக்கரைப்பற்று - 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் யோகராஜா இதயதினேஸ் ஊடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸனிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.

Sunday, 23 April 2017

ஆலையடிவேம்பு பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகள் நடாத்திய தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள்


ஆலையடிவேம்பு பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகள் நடாத்திய தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் நேற்று (23) மாலை வேளையில் கோலாகலமாக இடம்பெற்றன.

Friday, 21 April 2017

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் நடாத்தப்படவுள்ள சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா



ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படுகின்ற மாபெரும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா இம்முறை எதிர்வரும் 28-04-2017, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் அக்கரைப்பற்று - 7/4, தருமசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Thursday, 20 April 2017

கண்ணகிகிராமத்தில் மலசலகூடம் இல்லாது வாழும் 120 குடும்பங்களுக்கு அவற்றை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை


அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் மலசலகூடம் இல்லாது வாழும் 120 குடும்பங்களுக்கான மலசலகூடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடன் முன்னெடுப்பேன் என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சின் கீழுள்ள புனர்வாழ்வு அதிகார சபையின் பணிப்பாளர் சி.பத்மநாதன் உறுதியளித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சித்திரைப் புதுவருட ஒன்றுகூடல்


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் வருடாந்தம் நடைபெறுகின்ற தமிழ் – சிங்கள சித்திரைப் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (20) நண்பகல் 12.00 மணிக்கு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றது.

Sunday, 9 April 2017

தீர்த்தோட்சவம்

க்கரைப்பற்று பனங்காடு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய பங்குனி உத்தர தீர்த்தோட்சவம். 

  நேற்று (09) இடம் பெற்ற போது       சுவாமி  ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.மூர்த்தீஸ்வர குருக்களால் எடுத்துவரப்படுவதையும்  தீர்த்தோற்சவத்தில் கலந்து   கொண்ட பக்தர்களில் ஒரு பகுதியினரையும் காணலாம்




haran