Wednesday, 4 May 2016

வாள்வெட்டுச் சம்பவம் விளக்கமறியலில்

அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை (02) கைதுசெய்யப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும்  மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான  நளினி கந்தசாமி, செவ்வாய்க்கிழமை (03) உத்தரவிட்டார்.


 கடந்த சனிக்கிழமை (30) ஆலையடிவேம்பு வீரமா காளி கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வாச்சிக்குடாவைச் சேர்ந்தவர்களான வி.திவ்வியராஜ் (வயது 26)  சிந்துஜன் (வயது 22) உட்பட   மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், சிந்துஜன் என்பவர் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையிலும் வி.திவ்வியராஜ் என்பவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: