ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையோடு சம்பவ முகாமைத்துவம் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கிராமமட்டங்களில் சேவை புரியும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு சம்பவக் கற்கைகள் தொடர்பாக பயிற்றுவிக்கும் ஒருநாள் பயிற்சி ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (3) இடம்பெற்றது
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் ஆகியோரால் நடாத்தப்பட்ட இப் பயிற்சியில் ஆரம்ப வைபவத்திற்கு விருந்தினர்களாக ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
கிராம உத்தியோகத்தர்களும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பங்குபற்றிய குறித்த நிகழ்வில் கிராமமட்டங்களில் சேவையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுவதன் நோக்கம் குறித்தும், சம்பவ முகாமைத்துவம் தொடர்பான அறிமுகத்தையும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பங்குபற்றுனர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
சம்பவக் கற்கைகளைத் தயாரித்தல் மற்றும் அவற்றை முகாமைப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பான பயிற்சிகளை திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் வழங்கியதுடன், சம்பவக் கற்கைப் படிவங்களைத் தயாரிப்பதிலுள்ள சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாகவும் அவரால் உத்தியோகத்தர்கள் அங்கு பயிற்றுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment