Tuesday, 17 May 2016

இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த எமது உறவுகளின் ஆத்ம சாந்தி


இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த எமது உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி இன்று(17) மாலை  அம்பாறை ஆலையடிவேம்பு ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் தலமையில் நூற்றுக்கனக்கான உறவுகள் ஒன்றினைந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய நிகழ்வு இடம் பெற்றது

இதில் கருத்து  தெரிவித்த  நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன்
தமிழினம் தமிழ் சமுகம் அழிக்கப்பட்ட,  புதைக்கப்பட்ட , இரத்தம் தோய்த இந்த முள்ளிவாய்கால் நாள் தமிழ் மக்களின் இரத்தம் தோய்த இவ் நாள் தமிழ் மக்களுக்கு அழியாத பெரும் சோகத்தினை ஏற்படுத்தி நிற்கின்றது
இந்த நாளில் நடந்த சம்பவம் உயிரிழந்த எமது  அனைத்து தமிழ் உறவுகளுக்கான ஆத்மசாந்தி பிரார்தனையினை வேண்டி பிரார்த்திக்கின்றோம்

சர்வதேசம் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாய் புதைக்கப்படும் பொழுது  கண்ணைமூடிக் கொண்டு அண்று பார்த்திருந்த நாளில் இன்று பதில் சொல்லும் கடமை சர்வதேசத்திற்கே இருக்கின்றது


தமிழ் மக்களை அனாதரவாக விடப்பட்ட நாளாக நாம் இதனை கருதுகின்றோம் சர்வதேசம் ஒரு தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என அன்பான வேண்டு கோளை இந்த இடத்தில் முவைக்கின்றோம் என்றார் 

No comments: