Tuesday, 31 May 2016

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்துக்கான கொடி விற்பனை நிகழ்வு


இன்றைய தினம் சர்வதேச ரீதியாக அனுஸ்டிக்கப்பட்டுவரும் புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று (31) முதல் எதிர்வரும் ஜூன் 12 வரை வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தினால் நாடாளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்துக்கான கொடி விற்பனை நிகழ்வின் பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலக திவிநெகும சமுக அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வைபவம் இன்று (31) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Thursday, 26 May 2016

அம்பாறை மாவட்ட மட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் ஆலையடிவேம்பு பிரதேச அணி சம்பியனாகத் தெரிவு


விளையாட்டு அமைச்சின் அனுசரணையோடு அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன் தலைமையில் சம்மாந்துறை, உள்ளக விளையாட்டுத் தொகுதியில் கடந்த 15-05-2016 ஞாயிறன்று நடாத்தப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட வீர, வீராங்கனைகளுக்கான கராத்தே சுற்றுப்போட்டியில் ஆலையடிவேம்பு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய போட்டியாளர்கள் ஆறு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களோடு மொத்தமாக 9 பதக்கங்களைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தட்டிச்சென்று ஆலையடிவேம்பு பிரதேசத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற தேசிய இளைஞர் தின விழாவும் இளைஞர் கௌரவிப்பும்


தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கடந்த 24-05-2016 அன்று நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வு அன்றைய தினம் (24) வெகு சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

Tuesday, 24 May 2016

வெள்ள நிவாரணக் கொடுப்பனவுகளும் சீமெந்துப் பொதிகளும் வழங்கிவைப்பு


ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ‘செமட செவன - 2016’ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சீமெந்துப் பொதிகளை இலவசமாகப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ சேவை நிலையத்தினால் கடந்த வருட இறுதியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலாம் கட்ட வெள்ள நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்கிவைக்கும் நிகழ்வும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நேற்று (24) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

Monday, 23 May 2016

பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்திய தாகசாந்தி நிலையம்


வரலாற்றுத் தொன்மைமிக்க அக்கரைப்பற்று, பனங்காடு, பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் கடந்த 16-05-2016 முதல் இடம்பெற்றுவந்த வருடாந்த வைகாசி மஹோற்சவத்தின் இறுதிநாள் திருக்குளிர்த்தித் திருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் தாகசாந்தி வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தலைமையில் கடந்த (21) சனிக்கிழமை நண்பகலில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

Tuesday, 17 May 2016

இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த எமது உறவுகளின் ஆத்ம சாந்தி


இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த எமது உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி இன்று(17) மாலை  அம்பாறை ஆலையடிவேம்பு ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் தலமையில் நூற்றுக்கனக்கான உறவுகள் ஒன்றினைந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய நிகழ்வு இடம் பெற்றது
கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவைகள் (WUSC) நிறுவனத்தின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பினால் (SWOAD) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பாடசாலைக் கல்வியை முடித்து தொழில் வாய்ப்பற்ற நிலையிலுள்ள இளைஞர் யுவதிகளையும், பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் நிலையிலுள்ள மாணவர்களையும் இலக்குக் குழுவாகக் கொண்டு, அவர்களுக்குத் தேசிய தொழிற்தகைமைச் சான்றிதழ்களையும், அதனோடிணைந்தவகையில் பயிற்சி பெறுகின்ற துறைகளில் உடனடி வேலைவாய்ப்புகளையும் பெற்றுத்தரும் தொழிற் பயிற்சிநெறிகள் தொடர்பாக அறிவுறுத்தும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று (16) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Tuesday, 10 May 2016

தொழிற்பயிற்சிகளூடான வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் ஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு வீதி நாடகங்கள்


அம்பாறை மாவட்ட சமுக நல்வாழ்வு அமைப்பு (SWOAD) உலக கனேடிய பல்கலைக்கழக சேவைகள் (WUSC) நிறுவனத்தின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னெடுத்துவருகின்ற ‘வாழ்க்கைக்குத் தொழில் - தொழிலுக்குத் திறன்’ என்ற குறிக்கோளுடனான தேசிய தொழிற்தகைமைச் சான்றிதழ்களையும், அதனோடிணைந்தவகையில் உரிய துறைகளில் உடனடி வேலைவாய்ப்புகளையும் பெற்றுத்தரும் தொழிற் பயிற்சிநெறிகள் தொடர்பாக, பாடசாலைக் கல்வியை முடித்து தொழிலற்றிருக்கும் இளைஞர், யுவதிகளை அறிவூட்டும் வீதி நாடகங்கள் மூலமான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று (09) முன்னெடுக்கப்பட்டன.

Wednesday, 4 May 2016


சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் கட்புலன் குறைந்தோருக்கான உதவித் திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்டோருக்கு இலவச மூக்குக்கண்ணாடி மற்றும் கண் வில்லைகளை (லென்ஸ்) வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (04) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

வாள்வெட்டுச் சம்பவம் விளக்கமறியலில்

அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை (02) கைதுசெய்யப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும்  மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான  நளினி கந்தசாமி, செவ்வாய்க்கிழமை (03) உத்தரவிட்டார்.

Tuesday, 3 May 2016

சம்பவ முகாமைத்துவம்


ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையோடு சம்பவ முகாமைத்துவம் தொடர்பாக  ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கிராமமட்டங்களில் சேவை புரியும்  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு  சம்பவக் கற்கைகள் தொடர்பாக  பயிற்றுவிக்கும் ஒருநாள் பயிற்சி ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று  (3) இடம்பெற்றது

Monday, 2 May 2016

பாசிப்பயறு அறுவடை விழா

 தர்சி ...



திருக்கோவில் பிரதேசத்தில் பாசிப்பயறு அறுவடை விழா
நேற்று திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காயத்ரி கிராமத்தில் கிழக்கு மாகாணத்திற்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் வழங்கப்பட்ட பாசிப்பயறு செய்கையில் அறுவடை விழாவானது தம்பிலுவில் விவசாயப் போதனாசிரியை திருமதி தர்சினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.