Wednesday, 1 July 2015

கிழக்கிழங்கை ஆதிசைவ சிவப்பிராமனர்களில் மூத்த குரு இலி.கு.பழனிவேல் குருக்களின் நினைவுதினம





பண்டு முன்னயோத்தியிலிருந்து இலங்காபுரிக்கு வருகை தந்த சூரியவம்சத்தரசர்களால் (ஸ்ரீ குலசேனன் மகன் கூத்திகன் ) கலியப்தம் 2840 இல் சிவாலய பூயாகிரியைகளுக்காக இந்தியாவின் மல்லிகாச்சுனம் (ஸ்ரீ சைலத்தில் அமைந்துள்ள்  சிவஷேத்திரம் ) திருவிடை மருதூர் ஆகிய இடம்களில் இருந்து அழைத்துவரப்பட்ட ஆதிசைவ சிவப்பிராமனர்களின் மரபுவழி வந்தவர்களில் தற்போது கிழக்கிலங்கை ஆலயம்களில் பூசை செய்யும் குருமார்களின் தந்தையாகவும் மூத்த குருவுமான அக்கரைப்பற்று பகுதியில் வாழ்ந்து வந்த சிவஸ்ரீ .இலி.கு.பழனிவேல் குருக்களின் சிரார்த்ததினம் 1ம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது





திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய்த்தின் இன்றுள்ள தலபுரானத்தின்படி ஸ்ரீ குல குத்திகன் என்னும் அரசனால் இவ் ஆலய(காலம் கலியாப்தம் 2840 ) கும்பாபிசேக கிரியைகளுக்கும் பூசைகளுக்கும் என ஸ்ரீ மல்லிகார்ஜீனம் இந்தியாவில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட  சிவப்பிராமனர் பரம்பரையில் பிரசித்தி பெற்று விளங்கிய காசிப கோத்திரம் சிவஸ்ரீ.சரவனக்குருக்கள் ,சிவஸ்ரீ. பழனிகுருக்கள் ஆகியோரின் வழித்தோன்றலாகிய சிவஸ்ரீ லிங்கசாமிக் குருக்கள் அவர்தம் துனைவியார் ஸ்ரீமதி குஞ்சம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது புதல்வனாக 1932ம் ஆண்டு ஆனிமாதம் 10ம் நாள் ஈழக்கிழக்கில் அக்கரைப்பற்றில் பிறந்தார்



சிறுவயதில் தனது பெறியப்பா சிவஸ்ரீ முருகேசக்குருக்களிடம் வேதாகம பூஜை சோதிடம்களை முறையாக கற்றுத் தேர்ந்ததுடன் ஆலய கிரியைகளுடன் தன்னை இனைத்துக் கொண்டார்



இவரது ஆலய பூசைகளில் மனம் மகிழ்ந்த இவரது குரு வெருகலம் பதி கங்கைக்கரை ஆலயத்திற்கு பூசைகள் செய்ய அனுப்பி வைத்தார் இதனால் இவர் ஆலைய  பூசைகளிலும் சோதிடம் மனையடி சாஸ்த்திரத்திலும் தன்னை உறுதியாக்கிக்  கொண்டார்





இக் காலத்தில் இவரது அன்னன் சிவஸ்ரீ இலி.கு.சிவஞ்ஞான செல்வக்குருக்கள் இவரை மட்டக்களப்பு கூட்டுறவு பயிற்சிப் பாடசாலைக்கு அனுப்பி ஒரு கூட்டுறவுத்துறை ஊளியராக பரினமிக்கச் செய்தார் இதனால் ஆலையடிவேம்பு ரஞ்சனி ஜக்கிய கூட்டுறவு சமாசத்தில் வேலை கிடைத்து சிறந்த முகாமையாளராக மக்கள் முன் தோற்றமளித்தார்



இதற்க்குப்பின் அக்கரைப்பற்று மத்திய பலநோக்கு சங்கத்தின் கிளை முகாமையாளராக சுமார் 40 வருட காலம் சேவையாற்றி ஓவ்வு பெற்றார் .இக்காலத்தில் மக்கள் சேவை மகேசன் சேவை என்பதற்கு ஏற்ப்ப இவரது சேவை இருந்து வந்தது



நாம் மானிடராக பிறந்தோம் வாழ்ந்தோம்  மடிந்தோம் ஆனால் சமுகத்திற்கு என்ன செய்தோம் என்பதே இறுதிக்கேள்வி காலம் செண்ற குரு அவர்கள் அறப்பனி தவப்பனி தமிழ்ப்பனி சமயப்பணி நீதிப்பணி மனிதநேயப்பனிகளை ஆற்றியிருக்கின்றார் மகாத்மா காந்தியின் பிறப்பால் செயலால் இந்திய தேசம் பெருமை அடைகின்றது சுவாமி விவேகனந்தரினால் இந்து மதம் பெருமை கொள்கின்றது சுவாமி விவேகானந்தரின் முத்தமிழ் செயற்பாடுகளினால் கிழக்கிலங்கை பெருமை கொள்வது போல் அமரத்துவம் அடைந்த சிவஸ்ரீ.பழனிவேல் குருக்களால் அவர் சார்ந்த காசிப கேத்திரம் கிழக்கிலங்கை ஆதிசைவ சிவப்பிராமனர் மரபினர் மற்றும் இந்து சமுகம் பெருமை கொள்கின்றது



ஆலைய கடமைகள் சோதிடம் மனையடி சாஸ்திரம்கள் போண்றவற்றில் இவர் சத்தியம் தவறியதாக இதுவரை தகவல் இல்லை



இவ்வாறான கிழக்கிலங்கை ஆதிசைவ பிராமனர்களின் கைகளில் இன்று மட்டு-கொக்கட்டிச்சேலை தாண்ட்தோண்றீஸ்வரம் அக்கரைப்பற்று – சித்திவினாயகர் ஆலயம்கள் என்பன வழி வழி வந்து கொண்டிருக்கின்றது இந்த பரம்பரையில் உதிர்த்தவர்கள் சிவபெருமானை மூல மூர்த்தியாக தியானித்து 32 இடம்களில் வெண்ணீறனிந்து கழுத்தில் சிவ உருத்திராக்கம் அனிந்து சிவமாக அடியார்களுக்கு காட்சிதருபவர்களாவர்

No comments: