Monday, 30 March 2015

கா.பொ.த சாதாரணதர பரீட்சை O Level முடிவுகளைப் பார்வையிட!

2014ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது  முடிவுகளைப்பார்வையிட இலங்கை பரீட்சை திணைக்கள இணையத்தள பக்கத்தை பார்வையிடவும் !

 




Wednesday, 25 March 2015

அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான வருடாந்த அலங்கார உட்சவத் திருவிழா (பிரமோற்சவம்) - 2015..

 அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான வருடாந்த அலங்கார உட்சவத் திருவிழா 
ஆரம்ப நிகழ்வான திருக் கொடியேற்ற பெரும் சாந்தி நிகழ்வு (24) சிவஸ்ரீ.சீதாராம் குருக்களினால்  இடம் பெறுவதை காணலாம்
  
பனங்காடு அருள்மிகு பாசுபதேசுவரர் ஆலய வருடாந்த திருக்கொடியேற்றத் திருவிழா நிகழும் ஜய வருடம் பங்குனித் திங்கள் 11ம் நாள் புதன்கிழமை(25.03.2015) பூர்வபக்க சஷ்டி திதியும் ரோகிணி நட்சத்திரமும், அமிர்த சித்தயோகமும் கூடிய பகல் 10.00 மணியளவில் வரும் சுபவேளையில் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 05.04.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை வைரவர் பூசையோடு இனிது நிறைவுற திரிவருள் பாலித்துள்ளது. எனவே இத்திருவிழாக் காலங்களில் நிகழும் தெய்வீக நிகழ்வுகளில் பங்குகொண்டு இறையருள் பெற்றுய்யுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
*25.03.2015 (புதன்) – 1ம் நாள் – பகல் கொடியேற்றம், இரவு திருவிழா
*26.03.2015 (வியாழன்) – 2ம் நாள் – பகல் திருவிழா, இரவு திருவிழா
*27.03.2015 (வெள்ளி) – 3ம் நாள் – பகல் திருவிழா, இரவு திரிபுர தகனத்திருவிழா
*28.03.2015 (சனி) – 4ம் நாள் – பகல் திருவிழா, இரவு தெப்பத்திருவிழா
*29.03.2015 (ஞாயிறு) – 5ம் நாள் – பகல் திருவிழா, இரவு திருவிழா
*30.03.2015 (திங்கள்) – 6ம் நாள் – பகல் திருவிழா, இரவு பாசுபதாஸ்திரத் திருவிழா
*31.03.2015 (செவ்வாய்) – 7ம் நாள் – பகல் திருவிழா, இரவு மாம்பழத்திருவிழா
*01.04.2015 (புதன்) – 8ம் நாள் – பகல் திருவிழா, இரவு திருவேட்டைத்திருவிழா
*02.04.2015 (வியாழன்) – 9ம் நாள் – பகல் சங்காபிசேகத்திருவிழா, இரவு நகர்வலம்
*03.04.2015 (வெள்ளி) – 10ம் நாள் – காலை தீர்த்தோற்சவம், மாலை கொடியிறக்கம்
*04.04.2015 (சனி) – 11ம் நாள் – மாலை பூங்காவனத் திருவிழா
*05.04.2015 (ஞாயிறு) – 12ம் நாள் – பகல் பிராயச்சித்தம், மாலை வைரவர் பூசை


மாபெரும் அன்னதான, தாகசாந்தி வைபவங்கள்

பிரேம்....

ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாக அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலய மகா கும்பாபிஷேக வைபவத்தினை முன்னிட்டு இன்றையதினம் (25-03-2015) அக்கரைப்பற்று – 7/4 ஐச் சேர்ந்த பிரபல ஒப்பந்தக்காரரும் வர்த்தகருமான கே.கோடீஸ்வரன் அவர்களால் மாபெரும் அன்னதான, தாகசாந்தி வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.



இவ் அன்னதான மற்றும் தாகசாந்தி வைபவங்களில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் சைவப்பெருமக்களான பொதுமக்களும் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இன்றைய மகா கும்பாபிஷேக வைபவத்தினை சிறப்பிக்கும் வகையில் குறித்த அன்னதான மற்றும் தாகசாந்தி நிகழ்வுகளை ஏற்பாடு செய்த ஒப்பந்தக்காரர் கே.கோடீஸ்வரன் அவர்களுக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலய பரிபாலன சபையின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், எம்பெருமானின் திருவருள் கடாட்சம் நிறைவாய்க் கிடைக்கவும் பிரார்த்திக்கின்றோம்.

வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

பிரேம்...

 ஆலையடிவேம்பு பிரதேச செயலக அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலய மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி (சமுர்த்தி) திணைக்களப் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு ஆலய முன்றலில் இடம்பெற்றது.



நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் மன்றத் தலைவர் எம்.நௌஷாட் மஹ்றுப் அனுசரணையோடு இடம்பெற்ற இவ்வைபவத்தில் பிரதேச செயலாளர் தனது பாரியாரோடு இணைந்து முதலாவது பயனாளிக்கான வாழ்வாதார உதவிகள் அடங்கிய பொதியினை வழங்கிவைத்தார். தொடர்ந்து ஏனையோருக்கான உதவிகள் நிகழ்வில் பங்குபற்றியிருந்த அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.
அடுத்து குறித்த வாழ்வாதார உதவிகள் தொடர்பான பிரதேச செயலாளரது உரையும் அங்கு இடம்பெற்றது.

அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலய ஏககுண்ட பட்ச அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக வைபவம் இன்று, 25-03-2015 புதன்கிழமை

ஆலையடிவேம்பு பிரதேச செயலக அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலய ஏககுண்ட பட்ச அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக வைபவம் இன்று, 25-03-2015 புதன்கிழமை முற்பகல் 9.23 முதல் 11.08 மணிவரையுள்ள பூர்வபக்க சஷ்டி திதியும், ரோகினி நட்சத்திரமும், அமிர்தசித்த யோகமும், இடப லக்கினமும் கூடிய சுபமுகூர்த்தத்தில் விக்கினங்கள் தீர்க்கும் எம்பெருமான் விநாயகரின் அருட்கடாட்சத்துடன் வெகு சிறப்பாக இடம்பெற்றது.




ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் ஆலயத் தலைவருமான வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்த பக்திப்பரவச புண்ணிய நிகழ்வினை உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயம் மற்றும் கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயங்களின் பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கு.சீதாராம் குருக்கள் தன் உதவிக்குருவானோர் குழுவினரோடு இணைந்து நடாத்திவைத்தார்.
புண்ணியயகாலத்தில் ஆரம்பக்கிரியைகள், சடங்குகள் நடாத்தப்பட்டும் வேதபாராயணங்கள் ஓதப்பட்டும் இடம்பெற்ற ஆலய கோபுரத்தின் திவ்விய கலசமுழுக்கினைத் தொடர்ந்து பக்திப்பரவசமான இந்துமத அடியவர்களின் கண்கள் பனிக்க அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலய திருக்கும்பாபிஷேகக் குடமுழுக்கு இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து வேதபாராயணங்களும் மந்திரமும் ஒலிக்க சிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கு.சீதாராம் குருக்களின் சமயப் பேருரையும், குடும்ப சமேதராய் பக்தி மனத்தோடு கிரியைகளுக்குத் தலைமைதாங்கி நடாத்திக்கொண்டிருக்கும் பிரதேச செயலாளரின் ஏற்புரையும் நிகழ்த்தப்பட்டன.
தொடர்ந்து சமயச்சடங்குகள் தற்போது இடம்பெற்றுகொண்டிக்கின்றன.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் எதிர்வரும் 08-04-2015,

பிரேம்...




காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் எதிர்வரும் 08-04-2015, 09-04-2015 ஆகிய இரு தினங்களிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படவுள்ள பொதுசன அமர்வுகளை முன்னிட்டு அதில் பணியாற்றவுள்ள பிரதேச செயலக உத்தியோகத்தர்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று, 24-03-2015 செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.
குறித்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிளியு.குணதாஸ தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கணக்காளர் கே.கேசகன், மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் உட்பட கிராம உத்தியோகத்தர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
மேற்குறிப்பிடப்பட்ட பொதுசன அமர்வுகள் முதல்நாள் 08-04-2015 அன்று ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் மற்றும் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், மறுநாள் 09-04-2015 அன்று அக்கரைப்பற்று, நிந்தவூர் மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பாதிப்பிற்குள்ளான மக்களுக்காகவும் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மகளிர் தினச் சிறப்பு நிகழ்வு ..

பிரேம்....

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவும் திவிநெகும சமுக அபிவிருத்திப் பிரிவும் இணைந்து நடாத்திய இவ்வாண்டிற்கான உத்தியோகபூர்வ சர்வதேச மகளிர் தினச் சிறப்பு நிகழ்வு இன்று, 20-03-2015 வெள்ளிக்கிழமை காலை பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.






ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகவும், சட்டத்தரணி திருமதி.ஏ.எஸ்.ஆர்.அக்கிலா சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ரி.கிருபைராஜா, திவிநெகும பிரதேச உத்தியோகத்தர் கே.நேசராஜா, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சிபாயா றமீஸ், மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் உட்பட ஆலையடிவேம்பு பிரதேச மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராமமட்ட திவிநெகும (சமுர்த்தி) அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலரின் தலைமையுரையைத் தொடர்ந்து உதவித் திட்டமிடல் பணிப்பாளர், திவிநெகும பிரதேச உத்தியோகத்தர், மேலதிக மாவட்டப் பதிவாளர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரது உரைகளும் இடம்பெற்றன. இதில் சிறப்பம்சமாக ‘பெண்களும் அவர்களது உரிமைகளும்’ என்ற தொனிப்பொருளில் சட்டத்தரணி அக்கிலாவின் சிறப்புரை மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
தொடர்ந்து பங்குபற்றுனர்களது சார்பில் மகளிர் தினத்தின் சிறப்பு தொடர்பான நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன், திவிநெகும சமுக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் கிராமமட்டங்களில் சிறப்பான சமுகசேவையாற்றிய பெண்கள் அதிதிகள் தலைமையில்  கௌரவிக்கப்பட்டுப் பரிசில்களும் வழங்கப்பட்டன. அத்துடன் கிராமமட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்ட மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் நினைவுக்கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Thursday, 19 March 2015

பழைய வழிபாட்டுத்தலத்திலுள்ள விநாயகர் விக்கிரகத்தினை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தலத்திற்கு சமயக்கிரியைகளுடன் மாற்றும் நிகழ்வு

பிரேம்....

ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தின் பழைய வழிபாட்டுத்தலத்திலுள்ள விநாயகர் விக்கிரகத்தினை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தலத்திற்கு சமயக்கிரியைகளுடன் மாற்றும் நிகழ்வு இன்று (19) இடம்பெற்றது.
இதன்பொருட்டு கோளாவில் விக்கினேஸ்வரர் ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்களால் நடாத்தப்பட்ட சமயக்கிரியைகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
கிரியைகளின் முடிவில் உத்தியோகத்தர்கள்களின் முயற்சியோடு குறித்த விக்கிரகம் அதன் புதிய பீடத்திற்கு இடமாற்றப்பட்டு சுபநேரத்தில் முதற் பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.
சாகாம வீதியின் விஸ்தரிப்புப் பணிகளுக்கான பணிப்புரையின் பொருட்டு ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தின் குறித்த பழைய வழிபாட்டுத்தலம் விரைவில் அங்கிருந்து அகற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Saturday, 7 March 2015

அக்கரைப்பற்று- ஆதிவாசிகள் கிராமத்திற்காண பஸ் போக்குவரத்து (07) ஆரம்பம்

ஆதிவாசிகள் வாழும்  பகுதிக்கான பஸ் போக்குவரத்து மிக நீண்டகாலமாக இடம்பெறாமல் இருந்ததினை  கருத்தில் கொண்டு அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கிழ்  இன்று விவசாய நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகே , ஜ.தே.கட்சி தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாண தயா கமகே ஆகியோர்களால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது

இதில் பிரதி அமைச்சர் அனோமா கமகே அவர்களின் தமிழ் மக்களுக்கான இனைப்பாளர் வி.வினோகாந் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாண தயா கமகே அவர்களின் பிரத்தியோக இனைப்பாளர் தேசப்பிரிய கலந்து கொண்டிருந்தனர்
      
ஆரம்பித்து வைக்கப்பட்ட இச் சேவையானது காலை 07.00 மணிமுதல் இடம் பெறவுள்ளதாக அக்கரைப்பற்று பஸ் போக்குவரத்து முகாமையாளர் ஏ.எல்.அமீர் அலி தெரிவித்தார்

இவ் பஸ் போக்குவரத்தினால் ஆலையடிவேம்பு ,கோளாவில், தீவுக்காலை, பனங்காடு, புளியம்பத்தை, கண்னகிபுரம், கவடாப்புட்டி, மக்களும் பெரிதும் நண்மையடையவுள்ளதுடன் இவர்களது போக்குவரத்து செலவீனமும் குறைவடையும் என எதிர் பார்க்கப்படுகின்றது  


இப் பகுதிவாழ் மக்களது போக்குவத்து தொடர்பான பிரச்சினையினை கடந்தவருடம் பனங்காடு எப்.எம். செய்தியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்  

Friday, 6 March 2015

ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பின்தங்கியமக்களுக்கான காசோவைவழங்கும் நிகழ்வு!

  Dinesh

தழிழ்தேசிய கூட்டமைப்பின் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கலையரசன் அவர்களால் தனது நிதியினுடாக ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பின்தங்கிய மக்கள் குறிப்பாக விதவைகளுக்காக காசோவைவழங்கும் நிகழ்வானது இன்று (06) 3.00 மணியளவில் தீவுக்காவை பாலர் பாடசாலை கட்டடத்தில் நடை பெற்றது இந் நிகழ்வற்பு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் கலையரசன் அவர்களும் விஷேட அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் இரத்தினவேல் மற்றும்  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர் .