ஆதிவாசிகள் வாழும் பகுதிக்கான
பஸ் போக்குவரத்து மிக நீண்டகாலமாக இடம்பெறாமல் இருந்ததினை கருத்தில் கொண்டு அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கிழ் இன்று விவசாய நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகே , ஜ.தே.கட்சி தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாண தயா கமகே ஆகியோர்களால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது
இதில் பிரதி அமைச்சர் அனோமா கமகே அவர்களின் தமிழ் மக்களுக்கான
இனைப்பாளர் வி.வினோகாந் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாண தயா கமகே அவர்களின் பிரத்தியோக இனைப்பாளர் தேசப்பிரிய கலந்து கொண்டிருந்தனர்
ஆரம்பித்து வைக்கப்பட்ட இச் சேவையானது காலை 07.00 மணிமுதல் இடம்
பெறவுள்ளதாக அக்கரைப்பற்று பஸ் போக்குவரத்து முகாமையாளர் ஏ.எல்.அமீர் அலி தெரிவித்தார்
இவ் பஸ் போக்குவரத்தினால் ஆலையடிவேம்பு ,கோளாவில், தீவுக்காலை,
பனங்காடு, புளியம்பத்தை, கண்னகிபுரம், கவடாப்புட்டி, மக்களும் பெரிதும் நண்மையடையவுள்ளதுடன்
இவர்களது போக்குவரத்து செலவீனமும் குறைவடையும் என எதிர் பார்க்கப்படுகின்றது
இப் பகுதிவாழ் மக்களது போக்குவத்து தொடர்பான பிரச்சினையினை கடந்தவருடம்
பனங்காடு எப்.எம். செய்தியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
No comments:
Post a Comment