ஆலையடிவேம்பு பிரதேச செயலக அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலய ஏககுண்ட பட்ச அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக வைபவம் இன்று, 25-03-2015 புதன்கிழமை முற்பகல் 9.23 முதல் 11.08 மணிவரையுள்ள பூர்வபக்க சஷ்டி திதியும், ரோகினி நட்சத்திரமும், அமிர்தசித்த யோகமும், இடப லக்கினமும் கூடிய சுபமுகூர்த்தத்தில் விக்கினங்கள் தீர்க்கும் எம்பெருமான் விநாயகரின் அருட்கடாட்சத்துடன் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் ஆலயத் தலைவருமான வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இந்த பக்திப்பரவச புண்ணிய நிகழ்வினை உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயம் மற்றும் கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயங்களின் பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கு.சீதாராம் குருக்கள் தன் உதவிக்குருவானோர் குழுவினரோடு இணைந்து நடாத்திவைத்தார்.
புண்ணியயகாலத்தில் ஆரம்பக்கிரியைகள், சடங்குகள் நடாத்தப்பட்டும் வேதபாராயணங்கள் ஓதப்பட்டும் இடம்பெற்ற ஆலய கோபுரத்தின் திவ்விய கலசமுழுக்கினைத் தொடர்ந்து பக்திப்பரவசமான இந்துமத அடியவர்களின் கண்கள் பனிக்க அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலய திருக்கும்பாபிஷேகக் குடமுழுக்கு இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து வேதபாராயணங்களும் மந்திரமும் ஒலிக்க சிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கு.சீதாராம் குருக்களின் சமயப் பேருரையும், குடும்ப சமேதராய் பக்தி மனத்தோடு கிரியைகளுக்குத் தலைமைதாங்கி நடாத்திக்கொண்டிருக்கும் பிரதேச செயலாளரின் ஏற்புரையும் நிகழ்த்தப்பட்டன.
தொடர்ந்து சமயச்சடங்குகள் தற்போது இடம்பெற்றுகொண்டிக்கின்றன.
No comments:
Post a Comment