Wednesday, 25 March 2015

சர்வதேச மகளிர் தினச் சிறப்பு நிகழ்வு ..

பிரேம்....

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவும் திவிநெகும சமுக அபிவிருத்திப் பிரிவும் இணைந்து நடாத்திய இவ்வாண்டிற்கான உத்தியோகபூர்வ சர்வதேச மகளிர் தினச் சிறப்பு நிகழ்வு இன்று, 20-03-2015 வெள்ளிக்கிழமை காலை பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.






ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகவும், சட்டத்தரணி திருமதி.ஏ.எஸ்.ஆர்.அக்கிலா சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ரி.கிருபைராஜா, திவிநெகும பிரதேச உத்தியோகத்தர் கே.நேசராஜா, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சிபாயா றமீஸ், மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் உட்பட ஆலையடிவேம்பு பிரதேச மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராமமட்ட திவிநெகும (சமுர்த்தி) அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலரின் தலைமையுரையைத் தொடர்ந்து உதவித் திட்டமிடல் பணிப்பாளர், திவிநெகும பிரதேச உத்தியோகத்தர், மேலதிக மாவட்டப் பதிவாளர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரது உரைகளும் இடம்பெற்றன. இதில் சிறப்பம்சமாக ‘பெண்களும் அவர்களது உரிமைகளும்’ என்ற தொனிப்பொருளில் சட்டத்தரணி அக்கிலாவின் சிறப்புரை மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
தொடர்ந்து பங்குபற்றுனர்களது சார்பில் மகளிர் தினத்தின் சிறப்பு தொடர்பான நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன், திவிநெகும சமுக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் கிராமமட்டங்களில் சிறப்பான சமுகசேவையாற்றிய பெண்கள் அதிதிகள் தலைமையில்  கௌரவிக்கப்பட்டுப் பரிசில்களும் வழங்கப்பட்டன. அத்துடன் கிராமமட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்ட மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் நினைவுக்கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: