பிரேம்....
ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாக அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலய மகா கும்பாபிஷேக வைபவத்தினை முன்னிட்டு இன்றையதினம் (25-03-2015) அக்கரைப்பற்று – 7/4 ஐச் சேர்ந்த பிரபல ஒப்பந்தக்காரரும் வர்த்தகருமான கே.கோடீஸ்வரன் அவர்களால் மாபெரும் அன்னதான, தாகசாந்தி வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இவ் அன்னதான மற்றும் தாகசாந்தி வைபவங்களில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் சைவப்பெருமக்களான பொதுமக்களும் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கின்றா ர்கள்.
இன்றைய மகா கும்பாபிஷேக வைபவத்தினை சிறப்பிக்கும் வகையில் குறித்த அன்னதான மற்றும் தாகசாந்தி நிகழ்வுகளை ஏற்பாடு செய்த ஒப்பந்தக்காரர் கே.கோடீஸ்வரன் அவர்களுக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலய பரிபாலன சபையின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், எம்பெருமானின் திருவருள் கடாட்சம் நிறைவாய்க் கிடைக்கவும் பிரார்த்திக்கின்றோம்.
No comments:
Post a Comment