திவிநெகும ( வாழ்வின் எழுச்சி ) மூலம் நாட்டை கட்டியெழுப்பும் தேசிய செயற்திட்டத்தில் ஐந்தாம் கட்ட ஆரம்ப நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் தலைமையில் இன்று 11.10.2013 ஆம் திகதி காலை 10 மணி 11 நிமிட சுபவேளையில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்துகொண்டு பயன்தரும் மரக்கன்றினையும் நட்டுவைத்ததுடன் , இத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் தொடர்பாகவும் உரையாற்றினார்.
மேலும் இந் நிகழ்வில் அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் ஹஜாமுகைதீன் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் , அக்கரைப்பற்று கிழக்கு பெரும்பாக உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர், பாடசாலை அதிபர் , சமுர்த்தி முகாமையாளர்கள், பிரதேசத்திற்குரிய கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தார்கள் .
No comments:
Post a Comment