திருக்கோவில், வட்டமடு மேச்சல்தரை பிரதேசத்தில் வேட்டையாட முற்பட்டதாகக் கூறப்படும் 7 பேரை விசேட அதிரடிப்படையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன், இவர்களிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கி ஒன்றும் 9 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து மேற்படி 7 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி மற்றும் 9 தோட்டாக்களுடனும் சந்தேக நபர்கள் 7 பேரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 7 பேரையும் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment