Wednesday, 2 October 2013

"விழிப்புணர்வூட்டும் வீதி நாடகங்கள்"




சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் ஜனாப். அசாருதீன் அவர்களது தலைமையிலும் மனித அபிவிருத்தி தாபனத்தின் அனுசரணையுடனும் 02.10.2013, புதன்கிழமையன்று சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தொடர்பான சமுக விழிப்புணர்வினைக் கருப்பொருளாகக்கொண்ட வீதி நாடகங்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றன.







இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களும், பிரதேச பொதுமக்களும் இவ் வீதி நாடகங்களை கண்டுகளித்ததுடன் அவை தொடர்பான தமது கருத்துக்களையும் நாடகக்குழுவினரோடு பகிர்ந்துகொண்டனர்.

இதுபோன்ற நாடகங்கள் குறிப்பிட்ட நாளில் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகங்களிலும் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: