Friday, 22 November 2019

தெல்லிப்பழை மருத்துவ சிகரத்திற்கு பாராட்டு

haran
தெல்லிப்பழை மருத்துவ சிகரத்திற்கு பாராட்டு 
 

 


யாழ்ப்பாணம்  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக    வைத்திய அத்தியட்சகராக  கடமையாற்றிய வைத்தியர் யோ .திவாகர் தனது   எம்.டி.மருத்துவ நிர்வாகம் உயர் படடப்படிப்பை  மேற்கொள்ளவுள்ள செல்வதற்கான   பிரியாவிடை நிகழ்வு     நேற்று முன்தினம்  இடம் பெற்றிருந்தது 

மூத்த ஊடகவியலாளர் காலமானார்

haran


மூத்த ஊடகவியலாளர் காலமானார்

மட்டக்களப்பின் பத்தரிகைத்துறையில் தனக்கென தனி இடத்தை பதித்திருந்த மூத்த ஊடகவியலாளரான கதிர்காமதம்பி வாமதேவன் அவர்கள் நேற்று 11.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார் இவர் 1980ம் ஆண்டு வீரகேசரி ,சூடாமணி ,தினபதி ஆகிய பத்திரிகைக்கு ஊடக பணியினை ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.

Thursday, 14 November 2019

266 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வருகை  

haran


ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் உட்பட பல நாடுகளிலிருந்து 266 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வருகை தந்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயரதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

தேர்தல்.....பாடசாலைகள் பொறுப்பேற்பு

haran



2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளாக உபயோகப்படுத்த நாட்டிலுள்ள சில பாடசாலைகள் இன்றைய பாடசாலை நடவடிகைகள் முடிந்ததும் அந்தந்த கிராம சேவையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

ஒருவர் பொல்லால் தாக்கி கொலை 

haran


மட்டக்களப்பு – வாழைச்சேனை, கண்ணகிபுரம் பகுதியில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.


மனைவியுடனான வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, கணவர் தனது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளார்.

இதனைத் தடுக்கும் நோக்கில் மனைவி, தனது கணவனை பொல்லால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த 36 வயதான நபர், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாக்குதலின் போது காயமடைந்த 16 வயதான மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

Wednesday, 13 November 2019

பாலியல் துஸ்பிரயோகம்

haran


(பாஷி)
வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கல்முனை நீதவான் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது.