Thursday, 30 November 2017

ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டனப் பணிப் பகிஷ்கரிப்பு




ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸனை அவமதிக்கும் வகையில் பிராந்திய இணையத்தளமொன்றினூடாகக் கடந்த செவ்வாயன்று (28) வெளியிடப்பட்ட செய்தி மற்றும் அதனைத் தொடர்ந்து முகநூலில் இடம்பெற்றுவரும் முறையற்ற விமர்சனங்கள் தொடர்பில் கண்டனத்தைத் தெரிவிக்கும்முகமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நேற்று (29) பிற்பகல் அடையாள பணிப் பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபட்டனர். இப்பணிப் பகிஷ்கரிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரதேச சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அவர்களோடு இணைந்திருந்தனர்.

Thursday, 23 November 2017

மீள்குடியேற்ற அமைச்சினால் கட்டிமுடிக்கப்பட்ட வீடு கையளிப்பு






அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலில் கடந்தகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண மக்களுக்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைபடுத்தப்பட்டுவரும் 65>000 வீட்டுத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய வீடொன்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (23) காலை அக்கரைப்பற்று 8/3 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.

Wednesday, 22 November 2017

தேசிய மட்ட விசேட தேவையுடையோருக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவிக்கு கௌரவம்




அண்மையில் கொழும்பில் நடைபெற்றுமுடிந்த இவ்வருடத்தின் விசேட தேவையுடையோருக்கான தேசிய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலய மாணவி மகேந்திரன் செரின் வெண்கலப் பதக்கம் ஒன்றை வெற்றிகொண்டு சாதனை படைத்துள்ளார்.

Monday, 20 November 2017

ஆலையடிவேம்பில் மீள்குடியேற்ற அமைச்சினால் கட்டிமுடிக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு




அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலில் கடந்தகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண மக்களுக்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைபடுத்தப்பட்டுவரும் 65,000 வீட்டுத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய வீடொன்றைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (20) மாலை அக்கரைப்பற்று – 7/4 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற பல்லின மாணவர்களின் சகோதர சங்கமம் நிகழ்வு



தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு கோட்டக் கல்வி அலுவலகம் நடாத்திய பல்லின மாணவர்களின் சகோதர சங்கமம் நிகழ்வு இன்று (20) காலை இடம்பெற்றது.

Wednesday, 15 November 2017

சுனாமி இல்லை

அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணி முதல் ஏற்பட்டுள்ள சுனாமி பதற்றம் காரணமாக, கரையோர மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

கடல் நீர் உள்வாங்கியமையாலும் கிணறுகளிலுள்ள நீர்மட்டம் திடீரெனக் குறைந்தமையாலும் இந்தப் பதற்ற நிலையேற்றப்பட்டுள்ளது.

Monday, 13 November 2017

கிழக்கின் இந்து எழுச்சி விழா



haran
(எஸ்.நவா)

நேற்று  12.11.2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 மணியளவில் வெல்லாவெளி போரதீவுப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தில்;   உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் Nick & Nily Foundation  நிதியுதவியுடன் நடாத்தப்பட்ட கிழக்கின் இந்து எழுச்சி விழாவானது   கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின்;   தலைவர் த.துஷ்யந்தன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.

ஆண் உறைகள், கஞ்சா, ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கைது


மட்டக்களப்பு, தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸாருக்கு இன்று (திங்கட்கிழமை) முற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

Sunday, 5 November 2017

படுகொலை அஞ்சலி


( -க.விஜயரெத்தினம்)
களுவாஞ்சிகுடியில் இந்திய இரானுவத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்துதலும்,நினைவுத்தூபி திறப்புவிழாவும் (5.11.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் களுவாஞ்சிகுடி கிராமத்தலைவர் கே.கந்தவேள் தலைமையில் இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. களுவாஞ்சிகுடி கிராமத்தைச்  11 இளைஞர்கள் 1987.10.23 திகதியன்று இந்திய இரானுவத்தினால் பிடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாளை முன்னிட்டு இந்த நினைவுதினம்  அனுஸ்டிக்கப்பட்டது.

அவசரகால மின்தடை

haran
அவசரத் திருத்த வேலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஒருவாரத்துக்கு பாகுதி நேர மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் அம்பாறை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

கௌரவிக்கும் நிகழ்வு

                 (ஜெ.ஜெய்ஷிகன்)
வாகரைக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட கண்டலடி அருந்ததி வித்தியாலயத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

Saturday, 4 November 2017

10 ம் ஆண்டு நினைவேந்தல்


(க.சரவணன்)

முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வனின் 10 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னனி மட்டக்களப்பு தாமரைக்கேணி காரியாலயத்தில் நேற்று  வியாழக்கிழமை நடைபெற்றது.

Thursday, 2 November 2017

35 வருடங்களுக்கு பின்னர் காணி உத்தரவு பத்திரங்கள்



ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்னும் பல குடும்பங்கள் கடந்த மூன்று தலைமுறைகளாகத் தமது காணிகளுக்கு சட்ட வலுவுள்ள உத்தரவுப் பத்திரங்களோ அல்லது உறுதிகளோ எதுவும் இல்லாத நிலையிலேயே இன்றுவரையில் வாழ்ந்து வருகின்றனர் என பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் குறிப்பிட்டார்.

Wednesday, 1 November 2017

ஆலையடிவேம்பில் மீள்குடியேற்ற அமைச்சினால் கட்டிமுடிக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு



அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலில் கடந்தகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண மக்களுக்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைபடுத்தப்பட்டுவரும் 65,000 வீட்டுத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய வீடொன்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (01) காலை அக்கரைப்பற்று – 9 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.