இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் சற்சொரூபவதி நாதன், தனது 80ஆவது வயதில், இன்று (04) காலமானார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன் இன்று (04) காலமானார்.
1937 ம் ஆண்டு பிறந்த அவர், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முதலாவது பெண் துணைத் தலைவராக இவர் அறியப்படுகிறார்.
சற்சொரூபவதி நாதன் தனது ஆரம்பக் கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பெற்று அறிவியல் பட்டதாரியானார். பின்னர் விஞ்ஞான ஆசிரியையாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒலிபரப்புத் துறையில் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ள அவர், 1965ல் ஒலிபரப்புத்துறையில் இணைந்து கொண்டு அறிவிப்பாளரானார்.
இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் சற்சொரூபவதி நாதன், ஜவகர்லால் நேரு விருது (1958), சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது, வானொலி பவள விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
haran

No comments:
Post a Comment