Wednesday, 3 May 2017

குப்பைமேட்டில் தீ

அக்கரைப்பற்று, கண்ணகி கிராமத்திலுள்ள குப்பைமேட்டில் செவ்வாய்க்கிழமை (2) இரவு தீ பரவியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.  

 'திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம்' என்ற பெயருடன் காணப்படும் குப்பைமேட்டிலேயே தீ பரவியுள்ளது.   இந்தக் குப்பைமேட்டில் ஆலையடிவேம்புப் பிரதேச சபையால் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வருகின்றன.  


 குறித்த குப்பைமேட்டில் தீ பரவியமையால், அங்கு புகை மூட்டகமாகக் காணப்படுவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்துக்குச் சென்ற அக்கரைப்பற்றுப் பொலிஸார், விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

haran

No comments: