மகளிர்
மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் செயற்படும் சிறுவர் செயலகத்தினால் இலங்கையில்
முதற்தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தித் தர
நியமங்கள் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலைகளின்
ஆசிரியைகளுக்கு அறிவூட்டும் செயலமர்வு நேற்று (18) காலை ஆலையடிவேம்பு பிரதேச
செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச
செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச முன்பிள்ளைப் பராய
அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது
ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள 27 பாலர் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 50
ஆசிரியைகளுக்கு குறித்த தர நியமங்கள் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment