Saturday, 20 May 2017

கட்டடம் இடிந்து விழுந்தது

மட்டக்களப்பு, ஆரையம்பதி உள்ள கோயில் ஒன்றில், கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டடம் சற்றுமுன்னர். இடிந்து விழுந்தது. அதில், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 4.15 மணியளிவில் இடம்பெற்றுள்ளது. 

Friday, 19 May 2017

முன்பள்ளி அபிவிருத்தித் தர நியமங்கள் தொடர்பாக அதன் ஆசிரியைகளைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு


மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் செயற்படும் சிறுவர் செயலகத்தினால் இலங்கையில் முதற்தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தித் தர நியமங்கள் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலைகளின் ஆசிரியைகளுக்கு அறிவூட்டும் செயலமர்வு நேற்று (18) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Tuesday, 16 May 2017

1988க்கு பணம் அறவிட்டால் அறிவிக்கவும்




கல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Tuesday, 9 May 2017

ஆலையடிவேம்பில் பனை உற்பத்தியாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு


ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பனை உற்பத்திகளில் ஈடுபடும் நலிவுற்ற தொழிலாளர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வு இன்று (09) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

Monday, 8 May 2017

சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை – சம்மாந்துறை தொழில்நுட் பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் இருந்து முதலைகளால் கடிக்கப்பட்ட காயங்களுடன் கூடிய நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Thursday, 4 May 2017

சிரேஷ்ட அறிவிப்பாளர் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் சற்சொரூபவதி நாதன், தனது 80ஆவது வயதில், இன்று (04) காலமானார். 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன் இன்று (04) காலமானார். 

1937 ம் ஆண்டு பிறந்த அவர், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முதலாவது பெண் துணைத் தலைவராக இவர் அறியப்படுகிறார். 

Wednesday, 3 May 2017

குப்பைமேட்டில் தீ

அக்கரைப்பற்று, கண்ணகி கிராமத்திலுள்ள குப்பைமேட்டில் செவ்வாய்க்கிழமை (2) இரவு தீ பரவியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.  

சுமார் 10 பவுண் தங்கநகைகள் காளி கோவிலில் திருட்டு



திருக்கோவில்,  விநாயகபுரம் கிராமத்திலுள்ள காளி கோவிலில் சுமார் 10 பவுண் தங்கநகைகள் திருட்டுப் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தக் கோவிலின் கருவறைக் கதவு  திங்கட்கிழமை (2) இரவு உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணியப்பட்டிருந்த தங்கநகைகள் திருடப்பட்டுள்ளன. அட்டியல், தோடு, தங்கச்சங்கிலி உள்ளிட்ட நகைகளே திருட்டுப் போயுள்ளன.