Wednesday, 22 February 2017

இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனி மனித உயிர்ச் சேதங்களுக்காகச் செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகையினை, 200,000 ரூபாயிலிருந்து 500,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே, இந்த அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.



haran

No comments: