துன்முகி
வருட மார்கழித் திருவெம்பாவையின் இறுதிநாளான இன்றைய திருவாதிரைத் திருவிழாவை
முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான வைபவமொன்று ஆலையடிவேம்பு பிரதேச
செயலக வளாகத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் இன்று (11) பகல் இடம்பெற்றிருந்தது.
ஆலயத்
திருப்பணிச்சபையின் தலைவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருமான வி.ஜெகதீஸன்
தலைமையில் இடம்பெற்ற குறித்த அன்னதான வைபவத்தில் ஸ்ரீ மஹா கணபதிப் பெருமானின்
அடியவர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ஆலய குரு
சிவஸ்ரீ பிருந்துஜன் சர்மாவினால் ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் நிகழ்த்தப்பட்ட விசேட
திருவாதிரைத் திருவிழா பூஜையைத் தொடர்ந்து இடம்பெற்ற குறித்த அன்னதானத்தில் பிரதேச
செயலாளரோடு பொதுமக்களும், சிறுவர்களும், ஆலையடிவேம்பு பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டு வைபவத்தைச் சிறப்பித்திருந்தனர்.
No comments:
Post a Comment